இனிமே நாங்க தான், ரசிகர்கள் கொண்டாட்டம்.. ‘மாவீரன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வெளியானது!

Maaveeran Single Glimpse: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "மாவீரன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் மட்டும் இன்று (பிப்ரவரி 15 வெளியிடப்பட்டுள்ளது. 

Last Updated : Feb 15, 2023, 08:33 PM IST
  • "மாவீரன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வெளியீடு.
  • சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அற்று மாவீரன் படத்தின் முதல் பாடல்.
  • "மாவீரன்" படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.
இனிமே நாங்க தான், ரசிகர்கள் கொண்டாட்டம்.. ‘மாவீரன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வெளியானது! title=

Maaveeran Movie Update: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "மாவீரன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் மட்டும் இன்று (பிப்ரவரி 15) வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அதிரடியான அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகிறது. 

"மண்டேலா" படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "மாவீரன்" படத்தை இயக்கி வருகிறார். பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு, நடிகை சரிதா உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தெலுங்கு மார்க்கெட்டை குறிவைக்க சிவகார்த்திகேயன் போட்ட ஸ்கெட்ச்

கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. ஒன்று "டான்" மற்றொன்று "பிரின்ஸ்". இதில் "டான்" படம் சுமார் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. அதேநேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவான "பிரின்ஸ்" படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் "மாவீரன்" படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட்டாக்கிவிட வேண்டும் எனற முனைப்போடு சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க: சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தமா? என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News