சினிமாவில் பிரபலமாக மாறியிருக்கும் நடிகர் சூரி, மதுரையில் உணவகங்களை நடத்தி வருகிறார். முக்கியமான இடங்களில் எல்லாம் சூரிக்கு உணவகங்கள் இருக்கின்றன. அவரின் முதல் ஹோட்டலைக் கூட நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று திறந்து வைத்தார். இதனால் எளிதில் சூரியின் ஹோட்டலுக்கு விளம்பரம் கிடைத்தது. ஆனால் சிறிது காலத்திலேயே சூரியின் ஹோட்டல் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது.
மேலும் படிக்க | ‘ரசிகர்களே தொந்தரவு செய்யாதீங்க’ - சிம்புவின் வேண்டுகோள்
முறையாக வரி கட்டாமல் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே புகாரில் இப்போது மீண்டும் சிக்கியிருக்கிறது சூரியின் உணவகம். இந்த குற்றசாட்டு குறித்து அரசு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூரியின் இந்த பிரச்சனைக்கு தொடக்க புள்ளி போட்டதே சிவகார்த்திகேயன் என்று கூறலாம். பட விழா ஒன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், சூரியின் கைவசம் நிறைய படங்கள் இருப்பதாகவும், இதனால் அவர் காட்டில் வருமானம் கொட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், ரெய்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தெரிவித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் இப்படி கூறியதில் இருந்தே சூரிக்கு வரி ஏய்ப்பு புகார் எழத் தொடங்கியது. அடுத்தடுத்து புகாரில் சிக்கியிருக்கும் சூரியின் ஹோட்டல் குறித்து விரைவில் அடுத்தடுத்த அப்பேட் வர இருக்கிறது. சூரி இப்போது வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். நாவலை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு பிரத்யேகமாக உடலை கட்டுமஸ்தாக மாற்றியிருக்கிறார் அவர். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | முடிகிறது அவதார் - ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ