ஷாருக்கான் பட சாதனையை முறியடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம்!

Vinnaithaandi Varuvaayaa Re-Release Success : சிம்பு நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கான் படம் தமிழ் நாட்டில் செய்த ஒரு சாதனையை முறியடித்துள்ளது. அது என்ன சாதனை? 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Feb 26, 2024, 03:33 PM IST
  • ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு
  • கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை இயக்கியிருந்தார்
  • இப்படம், ஷாருக்கான் பட சாதனையை முறியடித்துள்ளது
ஷாருக்கான் பட சாதனையை முறியடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம்!  title=

Silambarasan Trisha Starrer Vinnaithaandi Varuvaayaa Re-Release Success: சிலம்பரசன்-த்ரிஷா நடிப்பில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. காதல் படமான இது, அன்றைய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மட்டுமன்றி இன்றைய இளசுகள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. காதல்-கிளாசிக் படங்களின் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் இந்த படம், ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் தற்போது 750 நாட்களை கடந்து இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இவ்வளவு வரவேற்பு கிடைக்க காரணம் என்ன? 

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரீ-ரிலீஸ் செய்யபப்பட்டுள்ள இந்த படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுக்கிறார்களோ இல்லையாே, பாடல்களை ஒன்றாக சேர்ந்து பாடி, தியேட்டை குட்டு கான்சர்ட்டாகவே மாற்றி விடுகின்றனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு படத்திற்கு ரசிகர்கள் அதிகம் வரவேற்பு கொடுக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 

அது மட்டுமன்றி, 2010ஆம் ஆண்டில் வெளியான போதே ரசிகர்களின் அதீத வரவேற்பை பெற்று சுமார் 50 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூல் செய்தது. ரசிகர்கள் இதன் ரீ-ரிலீஸிற்கும் இந்த அளவிற்கு வரவேற்பு அளிப்பதற்கு படத்தின் கதை, அற்புதமான க்ளைமேக்ஸ், சிம்பு-த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி என பலவற்றை காரணமாக கூறலாம். 

ஷாருக்கானின் பட சாதனையை முறியடித்த படம்..

திரை அரங்குகளில் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாக ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" (DDLJ) அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிலம்பரசன் TR நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.

மேலும் படிக்க | காமெடியன் டூ ஹீரோவான சூரி! தற்போது சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஷாருக்கான் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான படம், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியிருந்தார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கஜோல் நடித்திருந்தார். அனுபம் கேர், கரண் ஜாேஹர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம், இந்தியா முழுவதும் மாபெரும் ஹிட் அடித்த காதல் காவியமாக தற்போது வரை பார்க்கப்படுகிறது. இப்படம், தமிழ் நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போது நல்ல ஹிட் அடித்தது. இப்படம், தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செயப்பட்டபோது பல நாட்கள் ஓடியது. அதனை தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் முறியடித்திருக்கிறது. 

VTV

14 வருடங்கள் நிறைவு..

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் இதனை ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில்  750 நாட்களுக்கு மேலாக இத்திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது.. இன்றளவும் இத்திரைப்படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

பரவி வரும் ரீ-ரிலீஸ் ட்ரெண்ட்..

சமீப காலமாக பல பிரபல தியேட்டர்கள், டிவி சேனல்களை போல மாறி வருகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் க்ளாசிக் படங்களின் உரிமங்களை பெற்று, தங்களது தியேட்டர்களில் ஷோவாக மாற்றி வருகின்றன. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு வெளியான முத்து, ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஹிட் அடித்தன. அதே போல தனுஷ் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான 3 படமும் மறுவெளியீட்டின் போது நல்ல வரவேற்பினை பெற்றது. விண்ணைத்தாண்டு வருவாயா திரைப்படம், தற்போது இரண்டரை வருடங்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பல காதல் படங்களை இயக்கிய கெளதம் மேனனின் உண்மை காதல் கதை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News