தக் லைஃப் படத்தில் சிம்பு.. தொடங்கியது ஷூட்டிங்

தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது இது தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 18, 2024, 12:20 PM IST
  • கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
  • தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தக் லைஃப் படத்தில் சிம்பு.. தொடங்கியது ஷூட்டிங் title=

Simbu In Thug Life: மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

தக் லைஃப் திரைப்படம்:
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மெகா ஹிட் அடித்தது. இதையடுத்து, 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கைக்கோர்த்துள்ள படம் தான் தக் லைஃப் (Thug Life). கமலின் 234வது படமான இதன் டைட்டில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியனது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

தக் லைஃப் படக்குழு விவரம்:
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர், த்ரிஷா ஆவார். இவர், ஏற்கனவே கமலுடன் சில படங்களில் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது, 3வது முறையாக தக் லைஃப் படத்தில் அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். இது மட்டுமன்றி, மனிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் ஏற்கனவே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!

தக் லைஃப் படத்தில் இணைந்துள்ள மற்றொரு முக்கிய நடிகர், ஜெயம் ரவி ஆவார். இவரும் ஏற்கனவே மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழி வர்மன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதேபோல் இவர்கள் இருவருடன் இந்த படத்தில் துல்கர் சல்மான் ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

தக் லைஃப் படத்தில் இணைந்த சிம்பு:
இந்நிலையில் தற்போது தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜ்ஸ்தானில் நேற்று அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் மணிரத்னம் படமாக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? 
தக் லைஃப் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதன் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படுகிறது. 

தக் லைஃப் என்றால் என்ன? 
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நெடுஞ்சாலைகளில், பல்லாயிரக்கணக்கான பயணிகளை, வெகு சாதாரணமாக கழுத்தை நெரித்து கொன்று, உடமைகளை கொள்ளையடித்த குற்றவாளி கும்பல் ஒன்று நடமாடியதாக நம்பப்பட்டது. இவர்கள் தக்குகள்தான் எனவும் 'பிண்டாரிகள்' எனவும்  ஆங்கில அரசின் ஆவணங்கள் குறிக்கின்றனர். இவர்களை கூண்டோடு அழிக்க முடிவெடுத்த ஆங்கிலேய அரசு, பலரை சிறை பிடித்து, 2,000த்திற்கும் மேற்பட்டோரை கொன்றது. இந்த வரலாற்றை மையமாக வைத்து, கமலின் Thug Life படத்தின் கதை எழுதப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | எம்எஸ் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்! பிரமாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News