சூது கவ்வும் 2: படக்குழு வெளியிட்ட கலக்கலான புது போஸ்டர் வீடியோ

Soodhu Kavvum 2: குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்ற சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்த தகவலை படக்குழு பகிர்ந்து இருக்கிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 2, 2023, 10:02 AM IST
  • 'சூது கவ்வும்-2' படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார்.
  • 'சூது கவ்வும்-2' படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
  • 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகத்தை எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார்.
சூது கவ்வும் 2: படக்குழு வெளியிட்ட கலக்கலான புது போஸ்டர் வீடியோ title=

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியளவில் எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'சூது கவ்வும்'. இந்த இப்படத்தை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். ரூ.2 கோடி பட்ஜெட் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த டார்க் காமெடி க்ரைம் திரைப்படம் மொத்தமாக ரூ.35 கோடி வசூல் செய்திருந்தது. அத்துடன் இந்த படத்தில் பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ராதா ரவி, முனீஸ்காந்த் போன்ற பலர் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. அதேபோல் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல்கள் கொடுத்த சந்தோஷ் நாராயணனின் சூது கவ்வும் படத்தின் தீம் மியூசிக் இன்று வரை பலரது ரிங்டோனாக இருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்திருத்து இருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் குறித்த தகவலை சூது கவ்வும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் பகிர்ந்து இருந்தார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் சூது கவ்வும் 2 படத்தின் அறிவிப்புக்காக காத்திருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூது கவ்வும் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது கூறப்பட்டது.

மேலும் படிக்க | 20க்கும் மேற்பட்ட படங்கள்..2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி

மேலும் 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடிக்கிறார், இதுதவிர கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி, யோக் ஜாப்பி, ஹரிஷா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. யங் மங் சங்' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அர்ஜுன் தான் 'சூது கவ்வும் - 2' படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்ய, இக்னேஷியஸ் அஷ்வின் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தற்போது சூது கவ்வும் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூது கவ்வும் திரைப்படம் வெளிவந்து இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சூது கவ்வும் 2 திரைப்படத்தில் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இதனிடையே நடிகர் மிர்ச்சி சிவா தற்போது “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரனும்”, “காசேதான் கடவுளடா”, “சுமோ”, “கோல்மால்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. அதேபோல் இயக்குனர் ராம் இயக்கும் புதிய திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அஜித் ’V’ என்ற எழுத்தில் படங்களின் பெயர்களை வைக்க என்ன காரணம்? மறைந்திருக்கும் ரகசியம் என்ன?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News