ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!

ராம் சரணை வைத்து இயக்குநர் ஷங்கர் இயக்கிவரும் பான் இந்தியா திரைப்படத்தின் டைட்டில் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 28, 2022, 07:18 PM IST
  • ராம் சரணை வைத்து இயக்குநர் ஷங்கர் படம் ஒன்றை இயக்கிவருகிறார்.
  • பான் இந்தியா படமாக உருவாகிவரும் இதில் ராம் சரணுக்கு இரு ரோல்களாம்
  • இப்படத்தின் தலைப்பு பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?! title=

இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம்சரணை வைத்து புதிய படமொன்றை இயக்கிவருகிறார். ராம்சரணின் 15ஆவது படமான இது பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுவருகிறது.

 அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி முக்கிய ரோல்களில் நடித்துவருகின்றனர். பான் - இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ள இப்படத்தின் கதைக்குச் சொந்தக்காரர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ஷங்கரால் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட தமன் இப்படத்துக்கு இசையமைத்துவருகிறார். 

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் மட்டுமே ஷங்கர் படங்களுக்கு இதுவரை இசையமைத்துள்ள நிலையில் இந்தியன் - 2வுக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த வகையில் தமன் இந்தப் பட்டியலில் 4ஆவதாக இணைந்துள்ளார்.

இப்படத்தைப் பொறுத்தவரை ராம்சரண் கிராமம் மற்றும் நகரப் பின்னணி என இரு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம். அந்த வகையில் விவசாயி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிய ரோல்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இரு கதாபாத்திரங்களையும் ஷங்கர் பார்த்துப் பார்த்துச் செதுக்கிவருகிறாராம்.

மேலும் படிக்க | சினிமாவுக்கு வெளியே இந்த நடிகைகள் செய்யும் பிசினஸ்கள் என்னென்ன தெரியுமா?!

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் பற்றிய விபரம் கசிந்துள்ளது. அதன்படி, இப்படத்துக்கு அதிகாரி எனத் தலைப்பு வைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். பான் - இந்தியா வெளியீடாக வரவுள்ளதால் அனைத்து மொழிகளுக்கும் புரியும்படியான ஒரு பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழு யோசித்ததாம். அந்த வகையில்தான் அதிகாரி எனும் இத்தலைப்பை படக்குழு இறுதி செய்துள்ளதாம். 

அத்துடன் அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் எனவும் படக்குழு கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாம். விரைவில் டைட்டில் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க| ‘ராஜா கைய வச்சா அது strange-ஆ போனதில்ல..’ - வைரலாகும் மிரட்டலான Stranger Things தீம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News