'ஆயிரத்தில் ஒருவன்' படம் பற்றி அதிர்ச்சியான உண்மையை வெளியிட்ட செல்வராகவன்!

இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை நல்ல வரவேற்பு உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 10, 2022, 08:12 AM IST
  • ஆயிரத்தில் ஒருவன் படம் 2010ம் ஆண்டு வெளியானது.
  • இப்போது வரை இந்த படத்திற்கு ரசிகர்கள் உள்ளனர்.
  • படத்தின் பிஜிஎம் பலரது காலர் டியூன் ஆகா உள்ளது.
'ஆயிரத்தில் ஒருவன்' படம் பற்றி அதிர்ச்சியான உண்மையை வெளியிட்ட செல்வராகவன்! title=

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க சிறப்பான இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர், இயக்குனரான இவர் தற்போது நடிகராகவும் அவதாரமெடுத்துவிட்டார். இவரின் நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது தனது சகோதரன் தனுஷுடன் மீண்டும் இணைந்து நானே வருவேன் என்கிற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.  இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை வரவேற்பு உள்ளது.  கடந்த 2010ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா, பிரதாப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார், இன்றுவரை இப்படத்தின் பிஜிஎம் ஒரு சிறந்த கூஸ்பம்ப்ஸாக இருக்கிறது.

மேலும் படிக்க | நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் - விக்னேஷ் சிவன் போட்ட பதிவு... திணறும் சோஷியல் மீடியா

சோழர்களை பற்றி கூறும் விதமாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் பேசப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் செல்வராகவன் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் பட்ஜெட் குறித்த அதிர்ச்சியான உண்மையினை தெரிவித்துள்ளார்.  முதலில் இப்படத்தை ரூ.18 கோடியில் உருவாக்க இயக்குனர் செல்வராகவன் திட்டமிட்டு இருக்கிறார், இதில் 40% பட்ஜெட்டை செல்வராகவன் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.  ஆனால் திட்டமிட்டபடி அவரால் அந்த தொகைக்குள் படத்தை எடுத்து முடிக்க முடியவில்லை, பின்னர் அவர் கிட்டத்தட்ட ரூ.12 கோடி முதலீடு செய்து இருக்கிறார்.  

aayirathil oruvan

இதற்காக அவர் பல்வேறு வகையில் கடன் பெற்று முதலீடு செய்திருக்கிறார், ஆனால் படத்தின் வசூலிலிருந்து அவர் எந்த தொகையையும் பெற்றுக்கொள்ளவில்லை.  படத்தின் தயாரிப்பாளர் எவ்வித கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக இயக்குனர் செல்வராகவன் முதலீடு செய்திருக்கிறார்.  'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக இயக்குனர் செல்வராகவன் பெற்றிருந்த கடன் தொகையை திருப்பி செலுத்த அவருக்கு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆனதாக தெரிவித்துள்ளார்.  தனுஷை வைத்து 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தற்போது இயக்குனர் செல்வராகவன் திட்டமிட்டு வருகிறார்.

மேலும் படிக்க | 100 கோடி வசூல் செய்த நயன்தாராவின் லேட்டஸ்ட் திரைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News