இயக்குனர் செல்வராகவன் போட்ட ட்வீட், மீண்டும் விவாகரத்தா?

Selvaraghavan Gitanjali Divorce News: சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர் மூன்று குழந்தைகளுக்கு தந்தையாவார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 28, 2022, 09:19 AM IST
  • செல்வராகவனும் விவாகரத்து செய்யப்போகிறாரா.
  • இரண்டாவது மனைவியையும் விவாகரத்து.
  • தத்துவ பதிவால் குழப்பம்.
இயக்குனர் செல்வராகவன் போட்ட ட்வீட், மீண்டும் விவாகரத்தா? title=

செல்வராகவன் வைரல் ட்வீட்: செல்வராகவன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார். செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். 

கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குனனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் இயக்குனர் செல்வராகவன். இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மேலும் படிக்க | ராங்கி படத்தின் நிகழ்ச்சியில் த்ரிஷா சொன்ன முக்கிய தகவல்!

இந்த நிலையில் சமீபத்தில் தனது இரண்டாவது மனைவி கீதாஞ்சலியுடன் ஜாலியாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி வந்த இயக்குனர் செல்வராகவன் திடீரென சர்ச்சையான ட்வீட் பதிவை வெளியிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த ட்வீட்டில், "தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்." என ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

இயக்குனர் செல்வராகவனின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்ன மறுபடியும் டைவர்ஸா? என்று கூறி வருகின்றனர். இதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி திடீரென நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அதிரடியாக அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இயக்குனர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாணிக் காயிதம், விஜய்யின் பீஸ்ட்டில் முக்கிய கதாபாத்திரத்திலும், நானே வருவேன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும் இவர் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்து வருகிறார், விரைவில் இந்த படம் திரைக்கு வர காத்திருக்கிறது.

மேலும் படிக்க | மணி ஹீஸ்ட்டும் துணிவும் ஒன்னுதான் - முடிவெடுத்த நெட்ஃப்ளிக்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News