மெட்ராஸ்காரன் படத்தின் ‘காதல் சடுகுடு’ 2வது சிங்கிள் வெளியீடு!!

Madraskaaran Second Single Release : SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. 

Written by - Yuvashree | Last Updated : Dec 9, 2024, 05:25 PM IST
  • மெட்ராஸ்காரன் பாடல் வெளியீடு!
  • 2வது சிங்கிளின் பெயர் காதல் சடுகுடு
  • இதில் யாரெல்லாம் நடித்துள்ளனர்?
மெட்ராஸ்காரன் படத்தின் ‘காதல் சடுகுடு’ 2வது சிங்கிள் வெளியீடு!!  title=

Madraskaaran Second Single Release : SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில்,  மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள்  கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது. 

ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்…

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…
மிக மிக சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்தைக் கொண்டு வருகிறோம். இந்தப்படம் ஆரம்பமாக மிக முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு நன்றி. சதீஷ் மாஸ்டர், அருமையாக வேலை பார்த்துத் தந்ததற்கு நன்றி. எடிட்டர் வசந்த் பார்க்க சின்னப்பையன் போல இருப்பார், ஆனால் அருமையாக வேலை பார்த்துள்ளார். ஷேன் நிகாம், நிஹாரிகா இருவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தனர், இருவருக்கும் நன்றிகள். தயாரிப்பாளர் ஜகதீஸ் என் மீது நம்பிக்கை வைத்து முழுதாக கதை கேட்காமல்  தயாரித்தார் அவருக்கு நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் பேசியதாவது… 
மிக மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதும் கோரியோகிராஃபராக என் வேலை கேமராவுக்கு பின்னால் முடிந்து விடும். பல வருடங்களுக்குப் பிறகு, கோரியோகிராஃபராக மேடை ஏறியுள்ளேன். மெட்ராஸ்காரன்  படக்குழுவிற்கு நன்றி. காதல் சடுகுடு பாடல் இனிமையான அனுபவம். இந்தப் பாடலுக்கு  கல்லூரி காலத்தில் நடனமாடியுள்ளேன், இந்த பாடலை ரீமேக் செய்ய வேண்டும் என சொன்ன போது, மகிழ்ச்சியாக இருந்தது. ஷேன் நிகாம் ரசிகன் நான், மனிதர் எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறார் என வியந்திருக்கிறேன். அவர் இந்தப்பாடலில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நிஹாரிகாவும் மிக அருமையாக ஒத்துழைத்தார். என்னிடம் இருந்த ஐடியாவை பிரசன்னா மிக அட்டகாசமாக எடுத்து தந்தார். பாடல் பார்த்து எல்லோரும் பாராட்டுகிறார்கள். இயக்குநர் மிகவும் ஆதரவாக இருந்தார். தயாரிப்பாளர் ஜகதீஸ் பட்ஜெட்டை மீறி இப்பாடலுக்காகச் செலவு செய்தார். பிருந்தா மாஸ்டர், மணிரத்னம் சார் என ஜாம்பவான்கள் செய்த பாடல், அவர்களுக்கு அர்ப்பணிப்பாக இந்த பாடல் செய்துள்ளோம். எனக்குப் பெரிய சம்பளம் தந்துள்ளார் தயாரிப்பாளர். இந்தப்படத்தை மிகவும் நம்புகிறார். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றிகள். 

நடிகர் கலையரசன் பேசியதாவது… 
இங்குள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் எல்லாப்படத்திலும் உண்மையாக அர்ப்பணிப்போடு உழைப்போம், ரசிகர்கள் தரும் ஆதரவு  தான் நாம்  நடிகர்களாக வெற்றி பெறுகிறோம். தயாரிப்பாளர் ஜகதீஸ் நல்ல மனசுக்காரர், அவருக்காக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். ஷேன் டார்லிங், நிஹாரிகா சூப்பராக நடித்துள்ளனர். ஐஸு இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் செய்துள்ளார். டைரக்டர் வாலிக்கு நன்றி. இந்தப்படத்தில் எல்லோரும் சின்சியராக உழைத்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி. 

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…
SR PRODUCTIONS  என்னுடைய புரடக்சன் மாதிரி தான். இந்த புரடக்சன் ஆரம்பித்த நாட்களிலிருந்து உடன் இருந்துள்ளேன். ஜகதீஸ் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவரது மனதுக்கு இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன்.  நான் ஒரு நல்ல நடிகையாகப் பெயரெடுக்க, வாலி ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளார். ஷேன் நிகாம் அவருக்கு இங்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நிஹாரிகாவுக்கு வாழ்த்துக்கள். வாலி மிகப்பெரிய டைரக்டராக வர வாழ்த்துக்கள். அலைபாயுதே என் ஃபேவரைட் ஃபிலிம், இந்தப்பாடலைத் தந்த மணிரத்னம் சார், ஏ ஆர் ரஹ்மான் சார், சரிகமாவிற்கு நன்றி. இந்தப்பாடல் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. 

நடிகை நிஹாரிகா பேசியதாவது...
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எனது கனவு நனவாகியிருக்கிறது. மணி சார் மாதிரி ஜாம்பவான் செய்த பாடல் எங்களுக்குக் கிடைத்தது வரம். என்னை ஆட வைத்த சதீஷுக்கு நன்றி. பாடல் அழகாக வரக் காரணம் ஜகதீஸ் சார் தான் அவருக்கு நன்றி. வாலி சார் இந்தப்படத்தை என்னை நம்பி தந்ததற்கு நன்றி. எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது, ஆனால் பாடல் பார்த்து பாராட்டுக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.  விரைவில் படம் உங்களை மகிழ்விக்கும் நன்றி. 

நடிகர் ஷேன் நிகாம் பேசியதாவது...
தயாரிப்பாளர் ஜகதீஸுக்கு நன்றி. மலையாளத்தில் நிறையத் தயாரிப்பாளர்களுடன் வேலை பார்த்துள்ளேன். ஆனால் யாரும் இவர் அளவு ஒத்துழைப்பு தந்ததில்லை நன்றி. சதீஷ் , என்னை ஆட வைத்ததற்கு நன்றி. நிஹாரிகா நல்ல ஒத்துழைப்பு தந்தார். வாலி மோகன் தாஸ் இந்தப்படம் தந்ததற்கு நன்றி. தமிழ்ப் படங்களின் ரசிகன் நான், என் முதல் தமிழ்ப்படம் இது, கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி. 

மேலும் படிக்க | மெய்யழகன் படத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுத பிரபல நடிகர்!! யார் தெரியுமா?

மேலும் படிக்க | சூர்யா 45: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக 20 வயது இசையமைப்பாளர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News