WATCH: இணையத்தில் லீக்கான சர்கார் டீசர்; இது வேற லெவல் ஜி...

மீண்டும் இணையத்தில் வெளியான சர்கார் டீசர்; ஆனால், தற்போது தெலுங்கில்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2018, 06:23 PM IST
WATCH: இணையத்தில் லீக்கான சர்கார் டீசர்; இது வேற லெவல் ஜி... title=

மீண்டும் இணையத்தில் வெளியான சர்கார் டீசர்; ஆனால், தற்போது தெலுங்கில்....

விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. துப்பாக்கி, கத்தி ஆகியப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது.

இதில் கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி யூ ட்யூபில் சாதனை படைத்து வருகிறது. மூன்றே நாட்களில் 22 மில்லியன் பார்வையாளர்கள் இதனைப் பார்த்திருக்கிறார்கள். 

தற்போது இதன் தெலுங்கு டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா, விரைவில் ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் சொல்லப் படுகிறது. இதனால் உச்சக் கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விஜய்யின் தெலுங்கு ரசிகர்கள்!

 

Trending News