‘சலார்’ படம் இதுவரை செய்துள்ள வசூல்! அடடே..இத்தனை கோடியா!

Salaar Box Office Collection: ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்' உலகளவில் பாக்ஸ் ஆபிசில் 500 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Dec 29, 2023, 06:08 PM IST
  • சலார் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.
  • படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
  • இப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.
‘சலார்’ படம் இதுவரை செய்துள்ள வசூல்! அடடே..இத்தனை கோடியா! title=

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'கே ஜி எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்'.  இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. வெளியான முதல் நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. அத்துடன் இந்தியா முழுவதும் அற்புதமான ஒப்பனிங்கை பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமிதத்தையும் பெற்றது. இத்திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனையை செய்து.. தற்போது 500 கோடி ரூபாயை கடந்திருக்கிறது.‌ அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய பொழுது போக்கு படைப்புகளைப் பார்வையிடும் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாகவும் இப்படம் திகழ்கிறது.‌

'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் வெளியான 'பாகுபலி 1', 'பாகுபலி 2' ஆகிய படங்களுக்குப் பிறகு, 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையும் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்' படைத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.‌ 

இத்திரைப்படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள், பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமிருந்தும் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.‌ கற்பனை திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் நீல் உருவாக்கிய கான்சார் எனும் புனைவு உலகத்தின் வாழ்க்கை.. அதில் இடம் பெற்ற ஆக்சன் நிறைந்த உலகம்.. ஆகியவற்றை அவருடைய பிரத்யேக பாணியில் வழங்கிய விதம்.. 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் மற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்களின் கடும் உழைப்பு.. தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ... ஆகிய அனைத்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டிக்கு ஷண்முகம் வைத்த ஆப்பு.. முத்துப்பாண்டி செய்யும் சதி

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1- சீஸ்ஃபயர்' படத்தில் 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. இருந்தாலும், 400 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டுடன் தொடங்கப்பட்ட இந்த படம், ஒரு வாரத்தை கடந்தும் 500 கோடிதான் வசூல் புரிந்துள்ளதா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | கடைசிவரை கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு! இருவருக்கும் என்னதான் பிரச்சனை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News