ரன்பீர் - ஆலியா பட் திருமணம் எப்போது?... ஆலியாவின் சகோதரர் வெளியிட்ட தகவல்

ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் 20ஆம் தேதி நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2022, 12:56 PM IST
  • ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம்
  • ஆலியா பட் சகோதரர் வெளியிட்ட தகவல்
  • ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம்
  ரன்பீர் - ஆலியா பட் திருமணம் எப்போது?... ஆலியாவின் சகோதரர் வெளியிட்ட தகவல் title=

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் ரன்பீர் கபூரை சில வருடங்களாக காதலித்துவந்தார்.இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தச் சூழலில் இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இருப்பினும் எப்போது திருமணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

Ranbir, Alia

இதற்கிடையே இருவரின் திருமணமும் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற இருக்கிறது என தகவல் வெளியானது. இதனை ஆலியா பட்டின் உறவினர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி மெஹந்தியுடன் திருமண விழா தொடங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | பீஸ்ட் திருவிழா - விடுமுறை அளித்த தனியார் நிறுவனங்கள்; ஊழியர்களுக்கு ஜாலியோ ஜிம்கானா

ஆனால், திருமண தேதி முன்கூட்டியே கசிந்ததாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மீண்டும் திருமண தள்ளி போயுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆலியாவின் சகோதரர் ராகுல் பட், “ஏப்ரல் 14ஆம் தேதிதான் திருமணம் நடப்பதாக இருந்தது. இப்போது திருமணம் அந்த நாளிலிருந்து வேறு ஒரு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனேகமாக 17ஆம் தேதி வரவேற்பும், 20ஆம் தேதி திருமணமும் நடக்க வாய்ப்புகள் அதிகம்” என கூறினார்.

Ranbir, Alia

திருமணம் ஆர்.கே. ஹவுஸிலும், வரவேற்பு நிகழ்ச்சியானது மும்பையில் இருக்கும் தாஹ் மஹால் பேலஸிலும் நடைபெறும் என தெரிகிறது. இந்தத் திருமணத்தில் கரண் ஜோஹர், ஷாருக்கான், சஞ்சய் லீலா பன்சாலி, அகன்ஷா ரஞ்சன், அனுஷ்கா ரஞ்சன், ரோஹித் தவான், வருண் தவான், ஜோயா அக்தர் என ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | Sounds from the world of Beast - வெளியானது புதிய ப்ரோமோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News