லோகேஷ் கனகராஜ் இல்லையா? ரஜினியின் அடுத்த படத்தில் புதிய திருப்பம்!

'கந்தாரா' மற்றும் 'கேஜிஎஃப்' படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், ரஜினியை வைத்து புதிய படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.    

Written by - RK Spark | Last Updated : Apr 24, 2023, 06:35 AM IST
  • ஜெயிலர் பட பணிகளை முடிந்த ரஜினி.
  • அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
  • சுதா கொங்கராவிடம் கதை கேட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இல்லையா? ரஜினியின் அடுத்த படத்தில் புதிய திருப்பம்! title=

அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் தனது பகுதிகளை நடித்து முடித்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது, ரஜினிகாந்த் அவர் தற்போது பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் ஓய்வெடுத்து வருவதாகவும், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பிற்காக விரைவில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | லியோ படத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்! விஜய் தான் காரணமா?

'கேஜிஎஃப் 1', 'கேஜிஎஃப் 2' மற்றும் 'கந்தாரா' போன்ற மாபெரும் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் ரஜினியை ஆசிரமத்தில் சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி பெண் இயக்குநரான சுதா கொங்கராவும் இந்த சந்திப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ரஜினியின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் ரஜினியின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்க ஹோம்பலே பிலிம்ஸ் ஆர்வமாக இருப்பதாகவும், ஏற்கனவே சுதா கொங்கராவுக்கு அட்வான்ஸ் கொடுத்ததாகவும், இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தற்போது வரை தெரியவில்லை.  'லால் சலாம்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்  'ஜெய் பீம்' புகழ் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் 'தலைவர் 170' படத்தில் நடிக்க உள்ளார். ரஜினியின் 'தலைவர் 171' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவும், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | விரைவில் தொடங்கும் 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2! ஹீரோ யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News