ரஜினி பட தயாரிப்பாளர் தான் தனுஷ்- மித்ரன் ஜவஹர் படத்தையும் தயாரிக்கிறாரா..!!!

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களில் தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2020, 06:30 PM IST
  • யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களில் தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
  • விரைவில் தனுஷை ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் பெரிய திரையில் பார்க்கலாம் என கூறப்படுகிறது.
ரஜினி பட தயாரிப்பாளர் தான் தனுஷ்- மித்ரன் ஜவஹர் படத்தையும் தயாரிக்கிறாரா..!!! title=

ரஜினிகாந்த், தற்போது அண்ணாத்த படத்துக்காக சிறுத்தை சிவாவுடன் பணியாற்றி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

எந்திரன், பேட்டை ஆகிய படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் உடன் அவர் பணியாற்றும் மூன்றாவது படம் ஆகும். 

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களில் தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இவை அனைத்தும் சூப்பர் ஹிட் படங்கள். 
தனுஷ்  மித்ரன் ஜவஹர் உடன் இணைந்து பணியாற்றும் படத்தையும் சன் பிக்சரஸ் தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | 'தளபதி 65' படத்தின் முக்கிய அறிவிப்பு மற்றும் பிரேக்கிங் அப்டேட்

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் உடன் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்,. மேலும் இளைய டைரக்டரான கார்த்திக் நரேன் உடன் ஒரு பட வேலைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார். 

கர்ணன் பட வேலைகள் முடிந்த பின்னர் தான் மித்ரன் ஜவஹர் உடன் இணைந்து பணியாற்றப்போவதாக ஏற்கன்வே தனுஷ கூறியுள்ளார். 

மிதரன் ஜவஹர் 2021 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பட வேலைகள் ஆரம்பிப்பதாக கூறியுள்ளார்.

விரைவில் தனுஷை ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் பெரிய திரையில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

ALSO READ | தேமுதிகவின், விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார்கள்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News