நடிகை சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; பேனர், போஸ்டர்கள் கிழிப்பு

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அரசு  சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு இடங்களில் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 30, 2021, 03:36 PM IST
நடிகை சன்னி லியோனின்  கலை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; பேனர், போஸ்டர்கள் கிழிப்பு title=

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அரசு  சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு இடங்களில் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 

தேசிய அளவில் புகழ்பெற்ற 45 நடன குழுவினர் பங்கேற்க்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கமர் பிலிம் பேக்டரி சார்பில் பழைய துறைமுகத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய மூன்று தினங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரபல நடிகை சன்னி லியோனின் (Sunny Leone) கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கு ஆம் ஆத்மி, தமிழர் தளம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தமிழர் களம் அமைப்பின் தலைவர் அழகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடற்கரை சாலையில் ஒன்று திரண்டு கலை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களை போலீஸார் தடுப்பு கட்டை போட்டு தடுத்தனர் ஆனால் தடுப்புக் கட்டையை தூக்கி எறிந்து கலை நிகழ்ச்சி நடைபெறும் கூட்ட அரங்கை நோக்கி போராட்டக்காரர்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை தடுக்கும் போது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்ட அரங்கிற்குள் சென்ற அவர்கள் கதவை திறந்து சென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ | ஆபாச நடனம்; சன்னி லியோனுக்கு MP அமைச்சர் கெடு

இதையடுத்து அத்து மீறி போராட்டம் நடத்தியதாக கூறி போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து சன்னி லியோனின் பேனர் மற்றும் போஸ்டர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிழித்ததால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து 
அழகர் அவர் கூறும்போது புதுச்சேரியின் கலாச்சாரத்தை சீரழிக்கும் முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நடவடிக்கை கண்டித்து போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

ALSO READ | பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறாரா சன்னிலியோன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News