அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு மாகாபா மற்றும் பிரியங்கா வாங்கும் சம்பளம் இவ்வளவா

Priyanka Deshpande and MaKaPa Salary: மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வாங்கிய சம்பளம் குறித்த விவரம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 4, 2022, 08:50 AM IST
  • பிரபல தொகுப்பாளினி பிரியாங்கா தேஷ்பாண்டே
  • பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்
  • ஜூனியர் சூப்பர் சிங்கர், சீனியர் சூப்பர் சிங்கர்
அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு மாகாபா மற்றும் பிரியங்கா வாங்கும் சம்பளம் இவ்வளவா title=

மாகாபா மற்றும் பிரியங்வின் சம்பள விவரம்: தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக விஜய் டிவி செயல்பட்டு வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைக் கடந்து அதில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் தொகுபாளர்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் அவர்களின் நிகழ்ச்சிகளை, அவர்களுக்காகவே பார்க்கும் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. அதில் கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியின் முகமாக மாறியிருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் தொகுப்பாளர் மாகாபா ஆவார்கள்.

ஜூனியர் சூப்பர் சிங்கர், சீனியர் சூப்பர் சிங்கர், தி வாலஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்கள் காமெடி, கலாட்டா போன்றவற்றை செய்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அதிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. 

மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் புகுத்தி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என்று 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். 

இந்த நிலையில் இந்த சீசனில் முதல் பரிசை கிரிஷாங் பேரால். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. அதன்படி தற்போது மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இந்த நிகழ்ச்சிக்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்க 2 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியான முதல் மிகவும் பரவலாகி வருகிறது. மேலும் இவர்கள் இருவரும் பல ஆண்டுகாலமாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அமீரை மாற்ற ஐடியா வேணும்? கதறும் பிக்பாஸ் பாவனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News