ரஜினியை இயக்கி இருந்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் -இயக்குநர் உருக்கம்

இறுதியாக நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், ரஜினிகாந்த் சாருடன் நான் இயக்கும் படம் நான் விரும்பியபடி நடந்திருந்தால், பார்வையாளர்களை மகிழ்வித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும், 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 31, 2021, 01:23 PM IST
ரஜினியை இயக்கி இருந்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் -இயக்குநர் உருக்கம் title=

"நேரம்" படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன். "பிரேமம்" படம் மூலம் அனைவரின் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தார். "பிரேமம்" மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல மலையாள திரையுலகில் மிகப்பெரிய ஹிட்டாகவும் அமைந்தது. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கியா கடைசி படம் "பிரேமம்" தான். அதன்பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. 

ரசிகர்களின் விருப்பமான இயக்குனராக இருக்கும் அல்போன்ஸ் புத்ரன் மீண்டும் படங்களை இயக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதனை நிறைவேற்றும் வகையில், கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு "கோல்ட்" படத்தை இயக்குகிறார். இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அதேநேரத்தில் சமூக வலைதளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் பகிர்ந்த ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளது தான்.

அவர் தனது பதிவில் கூறியது...!

 

அப்போது..
2015-ல் பிரேமம் ரிலீஸுக்குப் பிறகு, ஒரு படத்தயாரிப்பாளராக நான் ரஜினிகாந்துடன் ஒரு படம் செய்ய விரும்பினேன். 99 சதவீத இயக்குனர்கள் இவரை வைத்து படம் பண்ண விரும்புவார்கள். ரஜினிகாந்த் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்க விரும்பவில்லை என்று ஒரு நாள் ஆன்லைன் பக்கத்தில் ஒரு செய்தி வெளியானது. அந்தச் செய்தி அனைத்து இடத்திலும் பரவியது. இந்த செய்தி குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். பிரேமம் ரிலீஸுக்குப் பிறகு நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்று பதிலளித்தேன். அதை புரிந்து கொண்டு ரஜினி சாரிடம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்பிறகு தான் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

இப்போது..
2021 ஆகஸ்ட் மாதம் "கோல்ட்" படத்தின் கதையை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஒருவரிடம் சொல்லும் போது.. அவர் என்னிடம் சொல்கிறார், அவர் ஒரு இயக்குனரிடம் பேசியதாகவும், அவர் ரஜினிகாந்த் படத்தை இயக்க மறுத்ததாகவும் கூறியதாகக் கூறினார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அதை நான் வெளிக்காட்டவில்லை.

2015 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இந்தப் போலிச் செய்தி என்னைத் தொந்தரவு செய்வதாக உணர்கிறேன்.

இறுதியாக நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், ரஜினிகாந்த் சாருடன் நான் இயக்கும் படம் நான் விரும்பியபடி நடந்திருந்தால், பார்வையாளர்களை மகிழ்வித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும், மேலும் அரசுக்கு வரியும் அதிகம் கிடைத்திருக்கும். நஷ்டம் எனக்கும், சூப்பர் ஸ்டாருக்கும், பார்வையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் தான்.

ALSO READ |  ரஜினி சார் என் படத்தை பார்க்க வேண்டும்! வேண்டுகோள் விடுத்த நடிகர்!

இந்தக் கட்டுரையைப் போட்டவரும், இந்தப் பொய்ச் செய்திக்குப் பின்னால் இருந்த மூளையும் ஒரு நாள் என் கண்முன் தோன்றுவார்கள். நீங்கள் நாளுக்காக காத்திருங்கள்.

ரஜினி சாருடன் என் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் நீங்கள் எப்போதும் போல எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ALSO READ | பிரேமம் இயக்குநரின் அடுத்த படம் தயார்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News