இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்

தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் சி வி குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் இயக்கத்தில் முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 29, 2023, 08:59 PM IST
  • தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் புதிய படம்.
  • சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்
  • முதல் காட்சியை இயக்கி படத்தை துவக்கி வைத்தார் தயாரிப்பாளர்.
இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் title=

நடிகராக அறிமுகமாகும் முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி: தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க முக்கிய இயக்குநர்களில் சீனு ராமசாமியும் ஒருவர். இவர் இயக்கிய கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவை. தற்போது அவர் ஜி.வி. பிரகாஷை வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி இயக்குநர் சீனு ராமசாமி புதுமுகங்கள் நடிக்கும் 3 படங்களை இயக்க இருக்கி வருகிறார். இது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போத தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர்-இயக்குநர் சி வி குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் (CV Kumar’s assistant Vijay Karthik) எழுதி இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற வெற்றிப்பட இயக்குநர் சீனு ராமசாமி (Popular director Seenu Ramasamy) நடிகராக அறிமுகம் ஆகிறார். 

மேலும் படிக்க | “அந்த மாதிரி படமா எடுக்குறேன்” விஷால் புகாரல் ஆடிப்போன இந்திய சினிமா! என்ன நடந்தது?

முதல் காட்சியை சி வி குமார் இயக்க இந்த திரைப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று இனிதே தொடங்கியது. எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் இந்த திரைப்படத்தின் யூடியூப் புகழ் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் நடிகராக அறிமுகம் ஆகும் இயக்குநர் சீனு ராமசாமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அவரது காட்சி இன்று படமாக்கப்பட்டது. 

புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இந்த திரைப்படம் அமையும் என்று இயக்குநர் விஜய் கார்த்திக் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகநீதி என்ற கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் பதிவு செய்யும் என்று அவர் மேலும் கூறினார். 

இந்நிலையில் சென்னையில் இன்று தொடங்கிய படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான துணை நடிகர் நடிகைகள் பங்கு பெற்றனர். அத்துடன் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து விழுப்புரம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஏ எஸ் சூரியா கவனிக்க, அதேபோல் படத்தின் படத்தொகுப்பை வி பி வெங்கட் கையாளுகிறார், எஸ் ஆர் ஹரி இசையமைக்கிறார், ஸ்வேதா தங்கராஜ் உடைகளை வடிவமைக்கிறார். இணை தயாரிப்பு: எஸ் ஶ்ரீராம் செய்கிறார்.தங்கம் சினிமாஸ் (Thangam Cinemas) எஸ் தங்கராஜ் தயாரிப்பில், விஜய் கார்த்திக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி (National award winning director Seenu Ramasamy) நடிகராக அறிமுகமாகும், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே சமூக நீதி என்பதையும் இது அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும் என்பதையும் உரக்கச் சொல்லும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... ஷாருக்கானுக்கு அப்புறம் நான்தான் - 'ஆடுகளம்' நரேன் ஓபன் டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News