தெலுங்கு திரையுலகித்தை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத், உட்பட12 பேருக்கு முகாந்திரம் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. இந்த வழக்குகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கில் சிக்கி உள்ள நடிகை சார்மி விசாரணையின் போது மருத்துவ பரிசோதனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். இவ்வழக்கில் விசாரணை தொடர்பாக நடிகை சார்மி புதன் அன்று சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை குழு முன்னதாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இது குறித்து நடிகை சார்மி கூறியிருப்பது:-
போதைப்பொருள் வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக்குழு முறையாக விசாரணை நடத்துவது இல்லை.
மேலும் இது போன்ற குற்றச்சாட்டால் என்னுடைய பெயர் சேதமடைந்துள்ளன.
விசாரணைக்கு ஆஜராகுபவர்களிடம் இருந்து பலவந்தமாக ரத்தம், தலைமுடி, நகங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சேகரிக்கின்றனர். இது சட்டத்திற்கு புறம்பானது.
இந்த விவாகரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்தம், தலைமுடி, நகங்கள் உள்ளிட்டவற்றை பெறுவது உள்பட மருத்துவ பரிசோதனைக்கு விலக்க வேண்டும். மேலும் விசாரணைக்கு நான் ஆஜராகும் போது என்னுடன் எனது வக்கீல் என்னுடன் இருப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குற்றம் சாட்டி உள்ளார்.