"மெர்சல்" அர்சனின் டீசர் போஸ்டர்!- பார்க்க!

Last Updated : Sep 20, 2017, 09:32 AM IST
"மெர்சல்" அர்சனின் டீசர் போஸ்டர்!- பார்க்க! title=

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில், மெர்சல் படத்தின் டீசர் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அட்லியின் பிறந்தநாளான செப்டம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கு முன்னதாக டீசர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கும் என்று தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

அந்தப் போஸ்டரில் காளை மேல் விஜய் கை வைத்து நிற்க, அருகில் நித்யாமேனன் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு உட்காந்திருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News