மாஸ் அப்டேட்; நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

நெல்சன்மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2021, 05:46 PM IST
மாஸ் அப்டேட்; நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் title=

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.பின்னர் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் அட்டகத்தி, டாடி, வட சென்னை, கனா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். 2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) கைவசம் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் ரிபப்ளிக், பீம்லா நாயக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ALSO READ | Shivani Narayanan: டிவிட்டரில் டிரெண்டாகும் கிளாமர் அழகி ஷிவானி

அதன்படி இவர் நெல்சன் வெங்கடேசன் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மான்ஸ்டர்' என்பது குறிப்பிடத்தக்கத்து.

ALSO READ | அசர வைத்த ஷிவானி; இணையத்தில் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News