Maamannan Song: மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய ‘ராசாக்கண்ணு’ பாடல் வெளியீடு!

Maamannan Vadivelu Song: மாமன்னன் படத்தில் வடிவேலு பாடியுள்ள ராசாக்கண்ணு பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : May 19, 2023, 05:57 PM IST
  • மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு.
  • நடிகர் வடிவேலு இந்த பாடலை பாடியுள்ளார்.
  • இந்த பாடலுக்கு ராசா கண்ணு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Maamannan Song: மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய ‘ராசாக்கண்ணு’ பாடல் வெளியீடு! title=

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடித்துள்ள படம் மாமன்னன். மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த படத்தில் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். 

ராசா கண்ணு:

நடிகராக மட்டுமன்றி, நன்றாக பாடல் பாடும் திறமையும் பொருந்தியவர் வடிவேலு. இவர், மாமன்னன் படத்தில் “ராசா கண்ணு” என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் யூடியூப்பில் வெளியான சில நிமிடங்களிலேயே பல ஆயிரம் வியூஸ்களை கடந்துள்ளது. 

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடல், கர்ணன் படத்தில் வரும் கண்டா வரசொல்லுங்க பாடல் போன்ற உணர்வை தருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மாமன்னன் படம்:

பரியேறும் பெருமாள், கர்ணன், போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநராக மாறியவர் மாரி செல்வராஜ். சமூகத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தனது படைப்புகளின் மூலம் மக்களுக்கு காண்பித்தவர் இவர். தற்போது இவர் இயக்கியுள்ள மாமன்னன் படமும் அப்படியொரு கதைக்களத்தை கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது. இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுகெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலும் இந்த படத்தில் நடிக்கிறார். இதனால் மாமன்னன் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அனைவருக்கும் எகிறி வருகிறது. 

ரிலீஸ் எப்போது?

தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக உள்ளது மாமன்னன். இந்த படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ளது. படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளையும் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவையும் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. படம், இந்த வருடத்தில் வரும் பக்ரீத் பன்டிகையை ஒட்டி  (ஜூன் 29) வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன.

‘லைட்ட கண்டா வர சொல்லுங்க பாட்டு மாதிரி இருக்கே..’

இன்று வெளியாகியுள்ள படத்தின் முதல் சிங்கிள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ள நிலையில், சிலர் இந்த பாடல் குறித்த புதிய கேள்வியை கேட்டுள்ளனர். இந்த பாடல் முழுவதும் கலரே இல்லாமல் ப்ளாக் அண்ட் வைட் நிறத்திலேயே உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியிருந்த கர்ணன் படத்தில் இடம் பெற்றிருந்த கண்டா வர சொல்லுங்க பாடலும் இதே போல கருப்பு வெள்ளை நிறத்தில்தான் வெளியிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், ராசா கண்ணு பாடலில் காட்டப்படும் பொம்மை, காட்சி  அமைக்கப்பட்டிருக்கும் விதம் என எல்லாமே கர்ணன் படத்தினைதான் ரசிகர்களுக்கு நினைவூட்டுகிறது. 

மேலும் படிக்க | Cook With Comali: வந்தவுடன் எலிமினேட் ஆகும் ‘இந்த’ போட்டியாளர்..! வாழைப்பழ டாஸ்க்தான் காரணமா?

நெகிழ வைத்த வடிவேலுவின் குரல்..

ராசா கண்ணு பாடலிற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் வடிவேலுவின் குரல் நெகிழ வைப்பதாகவும், ரஹ்மானின் இசை மனதை வருடும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில், நடிகர் வடிவேலு முரட்டுத்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருந்தார். இதனால், வடிவேலுவிற்கு இப்படத்தில் காமெடி ரோலுடன் சேர்த்து குணச்சித்திர ரோலும் கொடுக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நம்பர் 1 காமெடியனாக இருந்த வடிவேலு, சமீபத்தில் சில படங்களின் மூலம் தனது பழைய நிலையை தக்க வைத்துக்கொள்ள நினைத்தார். ஆனால், அது முடியாமல் போனது. இந்த படம், அவருக்கு தேவைப்பட்ட கம்-பேக்கை அளிக்கும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது. மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோரது கூட்டணி, இந்த படம் மூலம் வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் கருதப்படுகிறது. 

மேலும் படிக்க | பிரபல பாலிவுட் நடிகரின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News