கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். டி ஆர் ராஜேந்திரன், ஹிப் ஹாப் தமிழா என இவர்களது வரிசையில் இணைந்துள்ளார் பிரதீப். பாடல்கள் முதற்கொண்டு இவரே எழுதியுள்ளார். லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகமாக இருந்தது. மேலும் புரமோசன்களுகும் சிறப்பாக அமைந்தது இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பர் சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும்.
மேலும் படிக்க | நடிப்பது 2 கோடிக்கு வாங்குவது 200 கோடி - சூப்பர் ஸ்டாரை சீண்டிய கங்கனா ரணாவத்
இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்துள்ள லவ் டுடே வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அத்துடன் தியேட்டர் உரிமையாளர்கள் லவ் டுடே படத்திற்கு அதிகப்படியான திரையரங்குகளை ஒதுக்கி உள்ளனர்.
லவ் டுடே படத்தின் வசூல் விவரம்
அந்த வகையில் மொத்தமாக லவ் டுடே இதுவரை தமிழ்நாட்டில் 20.6 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 27.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பிரமோஷன் செய்த படங்கள் தோல்வி அடைந்த நிலையில் சைலன்ட் ஆக வந்து லவ் டுடே வசூல் வேட்டையாடி வருகிறது.
நடிகர் விஜயை கலாய்த்த பிரதீப் ரங்கநாதன்
இதற்கிடையில் லவ் டுடே பட இயக்குனர் தொடர்பாக தற்போது மற்றொரு செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. அதன்படி லவ் டுடே படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கவுள்ள படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் பிரதீப் கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜயை கேலி செய்யும் விதமாக சில பதிவுகளைப் போட்டிருந்தார். அதாவது ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்திற்கு முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் விஜயின் கத்தி படத்திற்கு மிக எளிதாக டிக்கெட்களை பெற முடிகிறது என பதிவிட்டு இருந்தார், அப்பொழுது போடப் பட்ட பதிவு இப்போது வைரலாகி வருகிறது, இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.
8 வருடம் கழித்து விஜய் காலில் விழுந்த லவ் டுடே இயக்குனர்
இந்த நிலையில் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், நான் நடிகர் விஜய் சாரிடம் கதை சொல்லி இருக்கிறேன். தற்போது நான் அதைப்பற்றி பேசக்கூடாது, ஆனால் கூடிய விரைவில் இது தொடர்பாக தகவல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ