தொடர்ச்சியாக ஹிட் ஹீரோக்களுடன் கூட்டணி! தமிழ் சினிமாவை ஆளப்பாேகும் லோகேஷ்?

லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்க உள்ளார். அவர் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 15, 2023, 08:09 PM IST
  • லோகேஷ் கனகராஜ் தன் கைவசம் முன்னணி ஹீரோக்கள் பலரது படங்களை வைத்துள்ளார்.
  • சூர்யா, பிரபாஸ் உள்ளிட்ட பலரது படங்களையும் இவர்தான் இயக்குகிறார்.
  • இதனால் இவர்தான் தமிழ் சினிமாவை இவர்தான் ஆளப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக ஹிட் ஹீரோக்களுடன் கூட்டணி! தமிழ் சினிமாவை ஆளப்பாேகும் லோகேஷ்?  title=

2017ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தவர், லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இவரது மார்கெட் உச்சத்திற்கு செல்ல, தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள் பலரை வைத்து படங்களை இயக்க ஆரம்பித்தார். 

லோகேஷ் கனகராஜ்: 

சினிமா கனவுகளோடு வளர்ந்த கலைஞர்களுள் ஒருவர் லோகேஷ் கனகராஜ். தனது வங்கி மேலாளர் பணியை விட்டுவிட்டு இயக்குநராக மாறினார். இவர், முதன் முதலில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ படத்தை இயக்கினார். இந்த படம் தனித்துவமான கதையுடன் அமைக்கப்பட்டிருந்தததால் இதற்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. இதையடுத்து முன்னணி ஹீரோவான கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கினார். இந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர், கமல் ஹாசனை வைத்து விக்ரம் போன்ற படங்களை இயக்கி அவர் வெற்றி இயக்குநராக மாறினார். தற்போது ‘லியோ’ படத்தை இயக்கி முடித்துள்ள அவரது கை வசம் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவை என்னென்ன படங்கள்..? யார் யார் அந்த ஹீரோக்கள்..? 

மேலும் படிக்க | குண்டானதால் நடிகைக்கு நேர்ந்த துயரம்! அய்யய்யோ..இவருக்கு இந்த நிலையா..?

தலைவர் 171: 

‘ஜெயிலர்’ நாயகன் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி அடுத்து டி.ஜே ஞானவேலின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து தனது 171 வது படத்தில் அவர் லோகேஷ் கனகராஜ்ஜுடன் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரது தரப்பில் இருந்தும் இன்றளவும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த படத்தின் வேலைகள் லியோ பட ரிலீஸிற்கு பிறகு தொடங்கப்படும் என்றும் 2024ஆம் ஆண்டு தலைவர் 171 படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோலக்ஸ்-இரும்பு கை மாயாவி: 

கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தை ரசிரக்கள் கொண்டாடினர். இதையடுத்து நடிகர் சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் என்ற படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஆரம்பக்கட்ட பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், அப்படி ஒரு படம் தயாரானால் கண்டிப்பாக தான் அந்த படத்தில் ரோலக்ஸாக நடிப்பேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார். 

லோகேஷ் சில நாட்களுக்கு முன்னர் தனது கனவு படம் குறித்து பேசினார். அப்போது, தான் 10 வருடங்களுக்கு முன்னதாகவே ‘இரும்புக்கை மாயாவி’ எனும் கதையை எழுதி விட்டதாகவும், அதை இயக்குவதுதான் தனது கனவு என்று கூறியிருந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் சூர்யா கலந்து காெண்ட நிகழ்ச்சியில் இரும்புக்கை மாயாவி படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கைதி 2: 

கார்த்தி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி பலத்த வரவேற்பினை பெற்றது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகமும் கண்டிப்பாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் எல்.சி.யூவில் இருப்பதால் இதன் படப்பிடிப்பு தலைவர் 171 படத்திற்கு பின்பு அல்லது அதன் படப்பிடிப்புடன் சேர்த்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரபாஸ் உடன் ஒரு புதிய படம்: 

தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய படத்திலேயே இந்த படத்திற்குதான் அதிக பட்ஜெட் என்றும் கூறப்படுகிறது. பிரபாஸும் பட்ஜெட் குறைவான படங்களில் நடிப்பதில்லை. அதனால், கண்டிப்பாக இவர்கள் இருவரும் இணைந்தால் அது மெகா பட்ஜெட் படமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் பனிகள் 2025ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘போர் தொழில்’ 2ஆம் பாகம் தயாராகுமா..? படத்தின் நாயகன் சொன்ன தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News