இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Indian 2 rakul preet singh Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரத்தை இந்த கட்டுரையில் பெறுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 14, 2024, 12:31 PM IST
  • சண்டை காட்சிகளில் எல்லாம் கலக்கி இருக்கிறார்.
  • இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
  • இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங்.
இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் எவ்வளவு? title=

Indian 2 rakul preet singh Salary : கடந்த ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்தில் குறைந்த நேரம் மட்டுமே வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இந்தியன் 2 திரைப்படம்:
இந்தியன் 2 திரைப்படம் ஒரு வழியாக பல்வேறு இன்னல்களை தாண்டி நேற்று வெளியாகி இருந்தது. ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2. சுமார் 28 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்பினை கொண்டிருக்கின்றனர். இப்படம், நேற்று அதாவது ஜூலை 12ஆம் தேதி வெளியாகி இருந்தது. 

102 வயது தாத்தாவாக கமல்:
 இந்தியன் படத்தில் சேனாபதி-சந்துரு என்ற தந்தை மகன் இரட்டை வேட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர் இதில் 102 வயது முதியவராக நடித்திருக்கிறார். ஆனால், அது துளியளவு கூட தெரியாத அளவிற்கு சண்டை காட்சிகளில் எல்லாம் கலக்கி இருக்கிறார். 

மேலும் படிக்க | வசீகரிக்கும் அழகு.. தங்கம் போல மிளிரும் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன்

தாத்தா கதறவிட்டாரா?
இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதில் “தாத்தா வராறு கதற விடப்போறாரு” பாடல் இடம் பெற்றிருந்தது. படம் வெளியாகியிருப்பதை தொடர்ந்து இதை வைத்தே பலர் படத்தை ட்ரோல் செய்தனர். “தாத்தா வில்லன்களை கதற விட்டாறா.. அல்லது ரசிகர்களை கதற விட்டாறா..?” என பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் விமர்சனங்களின் படி, படம் கொஞ்சம் சுமாராகத்தான் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கமலின் சண்டை காட்சிகள் நன்றாக வந்திருப்பதாகவும், க்ளைமேக்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியன் 3 படத்தின் க்ளிம்ஸ் காட்சிகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதுவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் எவ்வளவு:
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் மிகவும் குறைவான நேரம் நடித்திருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்தியன் 2 நடிகர்-நடிகைகள்:
இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த இவர் தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 

இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றிருந்த மறைந்த நடிகர்கள்..
இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில், ஒரு சிலரின் காட்சிகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News