மூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?

Mookuthi Amman 2 Update : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் அம்மன் கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  

Written by - Yuvashree | Last Updated : May 30, 2024, 12:16 PM IST
  • மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்
  • நயன்தாரா அம்மன் இல்லை
  • வேறு யார் தெரியுமா?
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?  title=

Mookuthi Amman 2 Update : 2020ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம், மூக்குத்தி அம்மன். அந்த ஆண்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததால் இதை ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில்தான் ரிலீஸ் செய்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள், தியேட்டரில் இதை பார்க்க தவறி விட்டோமே என்று ரசிகர்கள் பலர் கூறினர். அந்த அளவிற்கு படம் மக்களை கவர்ந்தது. 

மூக்குத்தி அம்மன்:

தாய், தாத்தா, மூன்று தங்கைகள் என ஒரு பெரிய குடும்பத்தை கட்டிக்காக்கும் பொருப்புள்ள இளைஞன், அவன் முன் திடீரென்று தோன்று தெய்வம் அனைத்து வரங்களையும் கொடுத்தால் எப்படியிருக்கும்? இதுதான் மூக்குத்தி அம்மன் படத்தின் கதை. மக்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து, அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் அரசியல் செய்கின்றனர் என்பதையும், காமெடியான காண்பித்திருப்பார் ஆர்.ஜே.பாலாஜி. இவரே, இப்படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் இருந்தார். 

இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தாயாக ஊர்வசி நடித்திருப்பார், தாத்தாகவாக நடிகர் மெளலி நடித்திருப்பார். தங்கைகளாக ஸ்முருதி வெங்கட், மது மைலாங்கோடி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வில்லனாக அஜய் கோஷ் நடித்திருந்தார். 

அம்மனாக வந்த நயன்தாரா:

மூக்குத்தி அம்மன் படத்தில், ஆர்.ஜே.பாலாஜிக்கு அருள் தரும் அம்மனாக நடித்திருந்தார் நயன்தாரா. இப்படத்தில் அவர் சில நிமிடங்களே வந்து செல்வார். இருப்பினும் இவருக்கான காட்சிகள் படம் முழுக்க வைக்கப்பட்டிருக்கும். இதனால், இவர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்ததே பெரும்பாலானோருக்கு தெரியாமல் போனது. இவரது கதாப்பாத்திரமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. 

மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்:

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக, படம் வெளியான புதிதிலேயே தகவல்கள் வெளியானது. ஆனால், அது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் நயன்தாரா அம்மனாக நடிக்கப்போவதில்லை என்பதுதான் அந்த தகவல்.

மேலும் படிக்க | விஜய்யிடம் ஆர்.ஜே. பாலாஜி சொன்ன கதை தெரியுமா?

இவர்தான் புதிய அம்மன்!

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக, புதிய அம்மன் களமிறங்க இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை, த்ரிஷாதான் என கூறப்படுகிறது. “நயன்தாரா இல்லன்னா த்ரிஷா..” என அம்மனை ஆர்.ஜே.பாலாஜி மாற்றிவிட்டதாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி, கடந்த சில நாட்களாக படத்தின் கதையை எழுதும் பணியில் இருப்பதாகவும், அந்த வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிபார்க்கப்படுகிறது. 

Sudharshan

பாலிவுட் பறவையான நயன்?

தமிழ் திரையுலகில் மட்டுமன்றி, தென்னிந்திய அளவில் டாப் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடந்த ஆண்டு வெளியான ஜவான் படம் மூலம் பாலிவுட்டிற்குள் பிரவேசித்த இவர், தொடர்ந்து இந்தி திரையுலகில் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அப்படி எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைக்க இருப்பதாகவும், குடும்பத்தை முதன்மை படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூக்குத்தி அம்மன் படத்தில் யார் அம்மன் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, இவர் அம்மன் இல்லை என்பத உறுதியாக கூற இயலாது. 

மேலும் படிக்க | கோடிகளை குவித்து வைத்திருக்கும் ஆர் ஜே பாலாஜி.. சொத்து மதிப்பு எவ்வளவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News