இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?

Indian 2 Movie Release Surprises : இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருப்பதைத் தொடர்ந்து அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 11, 2024, 06:09 PM IST
  • இந்தியன் 2 படத்தில் 2 சர்ப்ரைஸ்
  • கமல் ஃபேன்ஸிற்கு கொண்டாட்டம்
  • என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?
இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா? title=

Indian 2 Movie Release Surprises : ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், அவருடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், சுகன்யா உள்ளிட்ட பல நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆகுது 28 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது.

இந்தியன் 2 ரிலீஸ்: 

இந்தியன் 2  படத்தின் படப்பிடிப்பு பணிகளும் கதை எழுதும் பணிகளும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பட தயாரிப்பில் பிரச்சனை, கமலுக்கும் ஷங்கருக்கும் பிரச்சினை, படப்பிடிப்பில் விபத்து என ஒவ்வொரு முறை ஷூட்டிங் நடக்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு அசம்பாவிதங்கள் நடந்து கொண்டே இருந்தது. இந்த கதை தொடர்ந்து கொண்டே இருக்க, ஒரு வழியாக இந்தியன் 2 படத்தின் படபிடிப்பு நிலைவடைந்து தற்போது ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. ஜூலை 12ஆம் தேதி ஆன நாளை வெளியாக இருக்கிறது. இதில் கமல்ஹாசன் 102 வயது சேனாபதி இந்தியன் தாத்தாவாக நடித்திருக்கிறார். 

மெதுவான ப்ரீ புக்கிங்: 

வழக்கமாக எந்த பெரிய ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வந்தாலும் டிக்கெட் வெளியிட ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே அனைத்து சீட்டுகளும் விற்று தீர்ந்துவிடும். ஆனால், இந்தியன் 2 படத்தின் டிக்கெட்டுகளின் விற்பனை மட்டும் கொஞ்சம் மந்தமாகவே நடைபெற்றது. இதை எடுத்து பிற பெரிய நடிகர்களுக்கு இருப்பது போல நடிகர் கமல்ஹாசனுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இல்லையோ என கேள்வி எழுந்தது. இருப்பினும் இதுவரை இந்தியன் 2 படம் ஃப்ரீ புக்கிங்கில் மட்டும் சுமார் 16 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் தமிழகத்தில் மட்டும் சுமார் 5.5 கோடி வசூல் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியில் இந்த படத்திற்கு ரூ. 70 லட்சத்திற்கும் மேல் ப்ரீ புக்கிங் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் இதோ.. படம் எப்படி இருக்கு?

மனிதர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்: 

இந்தியன் 2 படத்தின் கிளைமாக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்துடன் சேர்த்து அதன் மூன்றாம் பாகத்திற்கான பணிகளும் படப்பிடிப்புகளும் நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த படத்தின் டிரைலரை இந்தியன் 2 படத்தின் கிளைமாக்ஸில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Indian 3

இடைவேளையிலும் சர்ப்ரைஸ்? 

இந்தியன் 2 படத்தின் இடைவேளையிலும் ஒரு சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டுள்ளதாம். வேறு ஏதுமில்லை, பிரசாந்த் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் அந்தாதுன் படத்தின் டிரைலர் இடைவெளியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்த்திற்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இல்லை என்றாலும் இந்த படத்தை பார்ப்பதற்காக பலர் பல ஆண்டுகளாக வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இது நல்ல ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | இந்தியன் 2 ட்ரெய்லர் விமர்சனம்: ஷங்கரின் இந்தியன் தாத்தா பட்டையை கிளப்புவாரா? சொதப்புவாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News