நயன்தாராவின் ஃபிட்னஸ் மற்றும் பியூட்டியின் ரகசியம் இதுதானா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தாரக மந்திரம் 'குறைவாக சாப்பிட்டு, அதிகமாக வேலை செய்ய வேண்டும்' என்பதே.  

Written by - RK Spark | Last Updated : Jun 3, 2022, 01:41 PM IST
  • நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளார்.
  • சமீபத்தில் இவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.
  • அடுத்ததாக O2 படம் வெளியாக உள்ளது.
நயன்தாராவின் ஃபிட்னஸ் மற்றும் பியூட்டியின் ரகசியம் இதுதானா? title=

திரையுலகில் நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போல் அவ்வளவாக நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பதில்லை. ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தான் நடிகர்களுக்கு இருப்பதை போன்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது, அந்த வகையில் அதிக ரசிகர்கள் கூட்டத்துடன் தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் நயன்தாரா.  பெண்களை மையப்படுத்தும் வகையிலான கதைகளையே அதிகம் தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் இவர். இவரை தொடர்ந்து தான் தற்போது பல நடிகைகளும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நடித்து வருகின்றனர்.  இவரை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தாலும் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து சாதித்துக்கொண்டே இருக்கிறார்.

மேலும் படிக்க | கேஜிஎப்2 திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம் - கட்டணத்தை ரத்து செய்த அமேசான்

இவரை காரணம் இல்லாமல் யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கவில்லை.  இவர் திறமையான நடிப்பை வெளிப்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும், தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.  இவர் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார், மேலும் தினமும் முறையான உணவுமுறையையும் பின்பற்றி வருகிறார்.  இந்த இரண்டும் தான் இவரது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.  தீவிர உடற்பயிற்சி மட்டுமே இவரது அழகான உடல் வடிவத்திற்கு காரணமில்லை.

nayan

இவரது உடலை அழகான வடிவமாக மாற்றுவதில் மற்றும் பராமரிப்பதில் யோகா உதவுகிறது, உடற்பயிற்சியுடன் சேர்த்து தவறாமல் நயன்தாரா தினமும் யோகா செய்து வருகிறார்.  தனது உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க தினமும் நிறைய தண்ணீர், தேங்காய் தண்ணீர், வைட்டமின் சி  நிறைந்த பழச்சாறுகள் போன்றவற்றை அதிகமாக பருகிறார்.  இதை தவிர்த்து இயற்கையான இனிப்பு நிறைந்தவற்றை மட்டும் தான் உண்பாராம், மற்றபடி இனிப்பு வகைகளை முற்றிலுமாக சாப்பிடமாட்டாராம்.  மேலும் இவை அனைத்தையும் விட, நயன்தாராவின் தாரக மந்திரம்  'குறைவாக சாப்பிட்டு, அதிகமாக வேலை செய்ய வேண்டும்' என்பதே.  இதனை அவர் பின்பற்றுவதால் தான் இன்றளவும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜின் சம்பவம்! விக்ரம் திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News