என்னை வெல்ல எவன் இங்கே! வெளியானது கே.ஜி.எப் 2 ட்ரைலர்!

கன்னட படமான கேஜிஎஃப் 2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Mar 27, 2022, 07:00 PM IST
என்னை வெல்ல எவன் இங்கே! வெளியானது கே.ஜி.எப் 2 ட்ரைலர்! title=

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் கேஜிஎஃப் 2.  2019ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து,இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். கொரோனா சூழல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது, இதனால் சொன்ன தேதியில் படக்குழுவால் படத்தினை வெளியிட முடியவில்லை. பிறகு படப்பிடிப்பு முடிந்த பின்னும் சரியான வெளியீடு தேதி கிடைக்காமல் படக்குழு தவித்து வந்தது. 

kgf

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ போஸ்டர்ல இந்த விஷயங்களைக் கவனிச்சீங்களா!?

இன்னிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.  கேஜிஎப் 2 திரைப்படம் தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் மோத உள்ளது. கேஜிஎப் 2 வெளியாகும் ஒரு நாளுக்கு முன்னதாக ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் வெளியாக உள்ளது. இருப்பினும் தற்போது இருந்தே இரண்டு படத்தின் ரசிகர்களும் இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.  

kgf

மிகவும் இண்டன்ஸ் ஆக கேஜிஎஃப் 2 டிரைலர் உள்ளது. டீசரைப் போலவே டிரைலரிலும் ஒரு நிமிடத்திற்கு பின்பு தான் ஹீரோ யஷ் காட்டப்படுகிறார்.  ட்ரெய்லரில் சஞ்சய்தத் பிரம்மாண்ட கொடூர வில்லனாக இடம் பெறுகிறார்.  முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பது தெரியவருகிறது.  தமிழ் ட்ரெய்லரில் சில திருக்குறள் வரிகளும் இடம்பெற்றுள்ளது, மேலும், அரசாங்கத்தை நேரடியாக எதிர்ப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  என்னை வெல்ல எவன் இங்கே என்றும் சில வரிகள் உள்ளது.  தற்போது ட்ரெய்லர் பார்த்த பின்பு படத்தினை பார்க்க ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் பெருகியுள்ளது.

 

மேலும் படிக்க | கே.ஜி.எஃப்- 2 ட்ரெய்லரில் என்ன ஸ்பெஷல்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News