‘KGF-2’ டீம் செய்த தவறால் கொந்தளிக்கும் தமிழ் ரசிகர்கள்- காரணம் என்ன?

பான் - இந்தியா ரிலீஸாக வெளியாகியுள்ள கேஜிஎஃப்- 2 திரைப்படம்  தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 16, 2022, 02:11 PM IST
  • கேஜிஎஃப்- 2 திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது.
  • பான்- இந்தியா ரிலீஸாக இப்படம் வெளியாகியுள்ளது
  • கேஜிஎஃப்- 2 வின் தமிழ் டைட்டில் சர்ச்சையாகி இருக்கிறது
‘KGF-2’ டீம் செய்த தவறால் கொந்தளிக்கும் தமிழ் ரசிகர்கள்- காரணம் என்ன? title=

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப்- 2 திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. பான் இந்தியா ரிலீஸாக வெளியாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாகப் பிரமாண்ட இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இப்படம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. வழக்கமாக ஒரு படத்தின் கதையோ டைட்டிலோதான் சர்ச்சைக்கு ஆளாகும்; ஆனால் இம்முறை டைட்டிலில் இடம்பெற்றுள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஒன்று பேசுபொருளாகியுள்ளது. அதாவது, ‘chapter- 2’ என்ற சொல்லுக்கான தமிழ் வடிவம் தியேட்டர் வெர்சனில் தவறாக இடம்பெற்றுள்ளது. ‘சே’ எனும் எழுத்து வார்த்தை உடைந்து எந்த அர்த்தமும் இல்லாது வாசிக்க முடியாத அளவில் உள்ளது . இவ்விவகாரம்தான் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

                               KGF 2

திரைப்படங்களைப் பொறுத்தவரை சப் - டைட்டிலில் இடம்பெறும் வாசகங்கள், யூடியூப்பில் வெளியாகும் தமிழ் லிரிக்கல் வீடியோக்கள் போன்றவற்றில் தமிழ் எழுத்துகள் பிழையாக அமைவது தொடர் கதையாக இருந்துவருகிறது. இவையும் தவறுதான் என்றாலும் இவற்றை கவனக்குறைவாக நிகழ்ந்தது எனவும் புரிந்துகொள்ளமுடியும்.

ஆனால் பான் - இந்தியா ரிலீஸ் என சொல்லிக்கொள்ளும் ஒரு படத்தில் அதன் டைட்டிலே இப்படி தவறாக இருக்கலாமா எனும் கேள்வி எழுந்துள்ளது. கோடிக்கணக்கான தமிழ் மக்கள் பார்க்கும் படத்தின் டைட்டில் இப்படி பிழையாக இருக்கலாமா எனவும் நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். படக்குழுவினரின் பல கட்டப் பார்வைகளுக்குப் பின்னர்தான் இந்த கேஜிஎஃப்- 2 படம் இறுதி செய்யப்பட்டிருக்கும்; அவ்வாறு இருக்கும் பட்சத்தில் யாருமே இதைக் கண்டறிந்து திருத்தம் செய்யாதது ஏன் எனவும் கோடிக்கணக்கில் லாபம் கொழிக்கும் திரைத்துறையில் தமிழ் தெரிந்த நபர்களைக் கொண்டு சரிபார்த்தபின் ரிலீஸ் செய்யாதது ஏன் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டுல எந்தக் காட்சிகளை நீக்குனாங்கனு தெரிஞ்சிக்கணுமா? இதைப் படிங்க!

                                                                           KGF 2

அதேபோல, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரிய நிறுவனங்கள் வெளியிடும் ஃபோட்டோ கார்டு விளம்பரங்கள்கூட இதுபோல ஏனோதானொவென பிழையாகத்தான் இருக்கின்றன எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'கமெர்சியல் படம்னா அதுல லாஜிக் பார்க்கக் கூடாது' எனச் சொல்வதுபோல கமெர்சியல் படங்களின் டைட்டிலிலும் இனி லாஜிக் பார்க்கக்கூடாது எனச் சொன்னாலும் சொல்வார்களோ எனவும் சிலர் கிண்டல் தொனியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | 'KGF-2' பட எடிட்டர் ஒரு சிறுவனா?! மிரண்டு பார்க்கும் திரையுலகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News