Suriya: சொந்த வீடு, சொகுசு கார், கோடிகளில் சம்பளம்! சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Suriya Net Worth And Salary: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Feb 4, 2024, 10:35 AM IST
  • கோலிவுட்டின் முன்னணி நடிகர், சூர்யா.
  • கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
  • சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Suriya: சொந்த வீடு, சொகுசு கார், கோடிகளில் சம்பளம்! சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? title=

Kanguva Actor Suriya Net Worth And Salary Details: பழம் பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் உள்ளார். 27 வருடங்களாக கோலிவுட்டில் ஹீரோவாகவும் நடித்து வரும் இவர், சினிமாவை தவிர்த்து சமூகத்திற்கு தேவையான பிற விஷயங்களையும் செய்து வருகிறார். 

அதிரடி நாயகன் சூர்யா:

1997ஆம் ஆண்டில் ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் விஜய்யுடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக இணைந்து நடித்த சூர்யா, அதன் பிறகு சிங்கிள் சிங்கமாக களமிறங்கினார். ஆரம்ப கால கட்டங்களில் மென்மையான குணம் படைத்த ஹீரோவாக நடித்து வந்த சூர்யா, காக்க காக்க, ஆயுத எழுத்து, சிங்கம் போன்ற படங்கள் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். தல, தளபதி, சூப்பர் ஸ்டார் என எந்த ஸ்பெஷல் டைட்டிலும் இல்லை என்றாலும், ரசிகர்களின் மனங்களில் தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

அயன் படத்தில் கிரிமினலாகவும், வாரணம் ஆயிரம் படத்தில் லவ்வர் பாயாகவும், மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் பேயாகவும் பலதரப்பட்ட அவதாரம் எடுத்த நாயகனாக இருக்கிறார் சூர்யா. தனது படத்திற்காக உடல் எடையை இழக்கவும், ஏற்றவும், தனது உருவத்தை மாற்றவும் தயங்காத ஒரு நாயகனாக இருக்கிறார். இதனாலேயே சூர்யாவிற்கு தமிழ்நாட்டை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். 

மும்பையில் சொந்த வீடு..

நடிகர் சூர்யா (Suriya Mumbai Apartment), தனது குடும்பத்தினருடன் சென்னையில் தங்கியிருந்தார். கூட்டு குடும்பத்தில் இருந்த இவர், தற்போது தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. மும்பை மாநகரில் முக்கிய பகுதியில் உள்ள பல கோடி மதிப்புள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை அவர் வாங்கியுள்ளதாகவும், அந்த வீட்டில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 30 படங்களில் பாடி 300 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த பிரபல பாடகி! பவதாரணியின் சொத்து மதிப்பு...

சூர்யா (Suriya luxurious Cars), BMW 7 Series கார், ஆடி Q 7, Mercedes BenZ M Class உள்ளிட்ட சில சொகுசு கார்களை வைத்துள்ளார். இதில், BMW 7 Series காரின் விலை, ரூபாய் 1.38 கோடி எனவும், Audi Q 7 கார், ரூ.80 லட்சம் எனவும், Mercedes BenZ M Class காரின் விலை ரூ.60 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இது தவிர, அவரது மும்பை அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.70 கோடி மதிப்பு மிக்கது எனவும் கூறப்படுகிறது. சென்னையிலும் சூர்யாவிற்கு வீடு இருப்பதாகவும், இதன் மதிப்பும் பல கோடி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சம்பள விவரம்..

நடிகர் சூர்யா, தற்போது ‘கங்குவா’ படத்தில் ஹீராேவாக நடித்து வருகிறார் (Suriya Kanguva Movie). இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சூர்யா, கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றியுள்ளார். இதில் நடிக்க, ரூ.50 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் சூர்யா தான் நடிக்கும் படங்களுக்கு ரூ.30 முதல் 40 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது (Suriya Salary For Kanguva Movie). இவை அனைத்தையும் சேர்த்து, சூர்யாவிற்கு ரூ.250 கோடி சொத்து மதிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது (Actor Suriya Net Worth Details). 

மேலும் படிக்க | வெயிட் பார்டியாக மாறிய சந்தானம்..முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News