தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் குறித்து நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார். கமலின் கருத்துக்கு தொடர்ச்சியாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில், கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட்:-
என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம்.எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்
— Kamal Haasan (@ikamalhaasan) July 26, 2017
என்று குறிப்பிட்டுள்ளார்.