கமல்ஹாசனின் ஆபிஸ் ரூமை பார்த்துள்ளீர்களா..? ‘இந்த’ வீடியோவில் பாருங்கள்!

Kamal Haasan Birthday Video: நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து நேற்று அவரது பிறந்தநாள் பார்டி நடைப்பெற்றது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 7, 2023, 01:08 PM IST
  • கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
  • நேற்று இவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது.
  • அவரது ஆபிஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் ஆபிஸ் ரூமை பார்த்துள்ளீர்களா..? ‘இந்த’ வீடியோவில் பாருங்கள்! title=

‘உலக நாயகன்’ என்று ரசிகர்களால் பலரால் பெருமையுடன் அழைக்கப்படுபவர், கமல்ஹாசன். இவருக்கு இன்று 69வது பிறந்தநாள். இதையொட்டி இவர் திரைபிரலபங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை அழைத்து பார்டி வைத்தார். 

கமல்ஹாசனின் பிறந்தநாள்:

திரையுலகம் எனும் பெரும் கடலில் ஆறு வயதிலேயே நீச்சலடிக்க ஆரம்பித்தவர், கமல்ஹாசன். “ஆறில் இருந்து அறுபது வரை” என்று படத்தின் டைட்டிலுக்கு ஏற்றார் போல தனது 6 வயதில் இருந்து 69 வரை கோலிவுட் உலகின் நாயகனாக வலம் வருகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழா போல சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். கமலின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் தமிழ் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். 

கமலின் ஆபிஸ் ரூம்:

கமலின் பிறந்தநாளையொட்டி, அவரது ஆபிஸ் ரூம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தில் இருக்கும் அந்த ரூமில், கமல் வாங்கிய பதக்கங்கள் பல ஸ்லாப்பில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றல்ல இரண்டல்ல, பல பதக்கங்கள் அதில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கமல்ஹாசன் புத்தக பிரியர் என்பது பலருக்கும் தெரியும். இதை நிரூபிக்கும் விதமாக அவது அலுவலகத்திலும் பல புத்தகங்கள் இரண்டிற்கும் மேற்பட்ட ஸ்லாப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கமல் பிறந்தநாள் பார்ட்டி:

கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடைப்பெற்றது. பகல் வேளையில் பத்திரிக்கையாளர்கள் மற்றம் சமூக வலைதள பிரபலங்களை அழைத்து கமல் விருந்து வைத்தார். இதையடுத்து, நேற்று மாலை திரை பிரபலங்களுக்கான பார்டி நடைப்பெற்றது. இதில் நடிகர்கள் அமீர் கான், சூர்யா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

மேலும் படிக்க | காதல் மன்னனாக திகழ்ந்த கமல்! முன்னாள் காதலிகளின் முழு லிஸ்ட்!

கமல்-மணிரத்னம் படத்தின் டைட்டில்:

‘நாயகன்’ படத்தில் முதன்முறையாக கைக்கோர்த்த மணிரத்னம்-கமல்ஹாசன் அதன் பிறகு எந்த படத்திலும் ஒன்றாக பணிபுரியவில்லை. கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பிறகு, இவர்கள் இணைந்துள்ள படம் Thug Life (தக் லைஃப்). கமலின் 234வது படமான இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். த்ரிஷா, ஏற்கனவே கமல் மற்றும் மணிரத்னமுடன் இணைந்து சில படங்களில் பணிபுரிந்துள்ளார். 

இந்தியன் 2:

கமல்ஹாசன் நடிப்பில் 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடித்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதன் இண்ட்ரோ வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் அனிருத்தின் இசைக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இண்ட்ரோவும் பெரிதாக பலரை ஈர்க்கவில்லை என்று கருத்துகள் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | நடிப்பை தவிர கமல்ஹாசனிடம் இருக்கும் ‘பிற’ திறமைகள்-என்னென்ன தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News