அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகை

பிரபல நடிகை Kalki Koechlinக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

Last Updated : Feb 9, 2020, 04:34 PM IST
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகை  title=

பிரபல நடிகை Kalki Koechlinக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண் கல்கி கோச்சலின். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் காதலித்து 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். 

இதையடுத்து கல்கி கர்ப்பமாகி கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாயும் சேயும் நலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News