காேலாகலமாக நடைப்பெற்ற காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்த விழா! திருமணம் எப்போது?

Kalidas Jayaram Engagement: பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்த விழா கோலாகலமாக நடைப்பெற்றது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 11, 2023, 10:33 AM IST
  • மலையாள நடிகர் ஜெயராமின் மகன், காளிதாஸ் ஜெயராம்.
  • இவர் விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாக நடித்தார்.
  • காளிதாஸிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
காேலாகலமாக நடைப்பெற்ற காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்த விழா! திருமணம் எப்போது?  title=

மலையாள நடிகரான ஜெயராமின் மகன், காளிதாஸ் ஜெயராமிற்கு அவரது காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. 

காளிதாஸ் ஜெயராம்:

90களில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர், ஜெயராம். முறை மாமன், தெனாலி, பொன்னியின் செல்வன் என இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. இவரது மகன் காளிதாஸ், 7 வயதிலேயே திரையுலகிற்குள் அறிமுகமாகிவிட்டார். இறுப்பினும் வளர்ந்த பின்பு ஹீரோவாக நடிக்க வேண்டும் என காத்துக்கொண்டிருந்த இவர், தமிழில் வெளியான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 

அதன் பிறகு தமிழில் வெளியான ஆந்தாலஜி திரைப்படங்களான புத்தம் புது காலை, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக 2022ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்திலும் கமலுக்கு மகனாக நடித்தார். 

காதல்-திருமண நிச்சயதார்த்தம்:

காளிதாஸ் ஜெயராம், பிரிட்டிஷ் மாடல் அழகியான தாரிணி என்பவரை காதலித்து வருவதாக தகவலகள் வெளியானது. இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த தகவலை இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் காளிதாஸ் உறுதி செய்தார். ஒன்றாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது, பண்டிகைகளின் போது குடும்பமாக ஒன்று கூடுவது என தனது காதல் குறித்த விஷயங்களில் காளிதாஸ் வெளிப்படையாக இருந்தார். 

காளிதாஸ்-தாரிணியின் காதல் உறவுக்கு ப்ரமோஷன் கொடுக்கும் வகையில், நிச்சயதார்த்த விழா நடைப்பெற்றது. இது குறித்த வீடியோக்களும் போட்டோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

யார் இந்த தாரிணி? 

காளிதாஸ் ஜெயராமின் காதலியும் வருங்கால மனைவியுமான தாரிணி, தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 3வது இடத்தை பிடித்த கெட்டிக்கார பெண்மணி இவர். இவர், தற்போது மாடலிங் உலகிலும் பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு போட்டோ ஷூட்டின் போது அறிமுகமாகி கொண்டதாக கூறப்படுகிறது. 
மனக்குமுறலில் ரசிகைகள்..

சமீப காலமாக, தமிழ் சினிமாவில் மனம் கவர்ந்த ஹீரோக்களாக வலம் வரும் நாயகர்கள் அனைவரும் வரிசையாக திருமணம் செய்து வருகின்றனர். ஹரிஷ் கல்யாண், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், கவின் போன்றவர்களின் வரிசையில் தற்போது காளிதாஸ் ஜெயராமும் சேர்ந்துள்ளார். தமிழ் பெண்கள் மட்டுமன்றி, தென்னிந்திய பெண்கள் பலருக்கு இவர் மீது பெரிய க்ரஷ் இருந்தது. இவர் தனது காதலி குறித்த பதிவுகளை வெளியிடும் போதும் அந்த பதிவின் கமெண்ட் செக்ஷனில் “அப்போ எனக்கில்லையா..” என மனம் தாளாமல் கதறி வந்தனர். தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற வீடியோக்களையும் தங்களது ஸ்டோரியில் சோகத்தினை பதிவு செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | மிருணால் தாகூருக்கு கல்யாணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

திருமணம் எப்போது? 

காளிதாஸ் தாரிணியின் நிச்சயதார்த்த விழா நடைப்பெற்றதை தொடர்ந்து, இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காளிதாஸின் அடுத்தடுத்த படங்கள்..

காளிதாஸ் ஜெயராம் தற்போது மூன்று படங்களில் பிசியாக இருக்கிறார். கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர், இந்தியன் 2 படத்திலும் ஒரு சிறிய கேரட்க்டரில் வருகிறார். மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகும் அவள் பெயர் ரஞ்சினி படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். தனுஷின் 50வது படத்திலும் நடிக்க இருக்கிறார். 

மேலும் படிக்க | இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News