கவர்ச்சியாக இல்லை அழகாக உணர்கிறேன் - காஜல் அகர்வால் நெகிழ்ச்சி

குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு கவர்ச்சியாக இல்லை ஆனால் அழகாக உணர்கிறேன் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 21, 2022, 05:35 PM IST
  • காஜலுக்கு பிறந்த ஆண் குழந்தை
  • காஜல் அகர்வால் நெகிழ்ச்சி
  • நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தான்
கவர்ச்சியாக இல்லை அழகாக உணர்கிறேன் - காஜல் அகர்வால் நெகிழ்ச்சி title=

பேரரசு இயக்கத்தில் உருவான பழனி படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதனையடுத்து எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான மகதீரா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு டாப் ஹீரோயினாக சில காலம் வலம் வந்தார். இந்தச் சூழலில் கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சுலு என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

Kajal Agarwal

அவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தான். அவனுக்கு நீல் என பெயரிட்டுள்ளனர். குழந்தை பெற்றதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் காஜலுக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் குழந்தை பிறப்பு குறித்து காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் குழந்தை நீலை இந்த உலகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

மேலும் படிக்க | பேன்சி நம்பர் வாங்க ரூ.11 லட்சம் செலவழித்த ஆர்ஆர்ஆர் பிரபலம் - மலைக்க வைக்கும் லைஃப் ஸ்டைல்

நீல் பிறந்த அந்த சில நொடி என் மார்பில் அவனை பிடித்துக்கொண்டது, விவரிக்க முடியாத உணர்வு. அந்த ஒரு கணத்தில் எனக்கு அன்பின் ஆழமான திறனைப் புரிய வைத்தது, மிகப்பெரிய அளவிலான நன்றியுணர்வை உணர வைத்தது.

குழந்தை பிறப்பு நிச்சயமாக எளிதான காரணம் அல்ல. உண்மையில், பிரசவத்திற்குப் பிறகு கவர்ச்சியாக இல்லை, ஆனால் நிச்சயமாக அழகாக உணர்கிறேன்” என நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | 7 நாள்களில் 700 கோடி வசூலித்த ராக்கி பாய்... மிரண்டுபோன திரையுலகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News