இல்லாத சீனுக்கு இத்தனை கோடி சம்பளமா? காஜல் அகர்வால் ஹேப்பி

ஆச்சார்யா படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், 1.50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 29, 2022, 01:49 PM IST
  • ஆச்சார்யா படத்தில் இருந்து காஜல் அகர்வால் காட்சிகள் நீக்கம்
  • காஜல் அகர்வால் நீக்கப்பட்ட காட்சிகளுக்கு சம்பளம் தெரியுமா?
  • ஆச்சார்யா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் என தகவல்
இல்லாத சீனுக்கு இத்தனை கோடி சம்பளமா? காஜல் அகர்வால் ஹேப்பி title=

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், திருமணமாகி குடும்ப பெண்ணாக செட்டிலாகிவிட்டார். அண்மையில் தாயான அவர் குழந்தையை கவனித்து வருகிறார். அவர் கடைசியாக ஆச்சார்யா படத்தில் நடித்திருந்தார். ராம்சரண் மற்றும் சிரஞ்சீவி நடித்திருக்கும் திரைப்படத்தில் காஜல் அகர்வாலுடன் பூஜா ஹெக்டேவும் நடித்திருந்தார். இந்தப் படம் திட்டமிட்டப்படி இன்று வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காஜல் அகர்வால் நடித்திருந்த காட்சிகள் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டன. 

சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தாலும், கதாப்பாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாததால் காஜல் அகர்வாலின் காட்சிகள் நீக்கப்பட்டதாக இயக்குநர் தெரிவித்தார். இதுகுறித்து காஜல் அகர்வால் மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினருக்கும் தெரியப்படுத்தப்பட்டதாகவும் இயக்குநர் சிவா கூறியிருந்தார். காஜல் அகர்வாலின் காட்சிகள் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது. உள்நோக்கம் இருக்க வாய்ப்புள்ளது என்றும் சிலர் கிளப்பிவிட்ட நிலையில், கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாததாலேயே நீக்கப்பட்டதாக மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஆச்சார்யா படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

இந்நிலையில், இப்படத்தில் காஜல் அகர்வால் நடித்ததற்கு 1.50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில்  நடித்து நீக்கப்பட்ட காட்சிக்கு காஜல் அகர்வால் பெற்ற தொகையைக் கேட்டு நெட்டிசன்கள் வாயைப் பிளந்துள்ளனர். இதனிடையே, ராம்சரண் மற்றும் சிரஞ்சீவி காம்போவில் வெளியான ஆச்சார்யா எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற விமர்சனம் வெளியாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியிருக்கும் சூழலில், அடுத்தபடமாக வெளியாகியிருக்கும் ஆச்சார்யா, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லையாம். ராம் சரண் கதாப்பாத்திரம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், படமாக பார்க்கும்போது மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.  

மேலும் படிக்க | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதிக்கொள்ளும் விஜய் - அஜித் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News