அன்னையர் தினத்தில் எமோஷனல் ஆன காஜல்

அன்னையர் தினத்தை முன்னிட்டு காஜல் அகர்வால் சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 8, 2022, 07:15 PM IST
  • அன்னையர் தினத்தில் காஜல் அகர்வால் எமோஷனல்
  • காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை
அன்னையர் தினத்தில் எமோஷனல் ஆன காஜல் title=

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தான்.அவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்நிலையில், அன்னையர் தினமான இன்று நடிகை காஜல் அகர்வால் முதன் முறையாக தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

Kajal

அந்த புகைப்படத்துடன் அவர், “எனது மகனே நீ என்னுடைய வாழ்வில் எவ்வளவு பொக்கிஷம் என்பதை உணர்ந்துகொண்டேன். நான் உன்னை கைகளில் வாங்கி உன் சிறிய கையை பிடித்தபோது, உன் சுவாசத்தை உணர்ந்தேன். உன் அழகான கண்களைப் பார்த்தபோது அன்பு என்பதை உணர்ந்தேன். நீதான் என் முதல் குழந்தை, எல்லாமே நீதான் முதலில்; உனக்கு தாயாக பல்வேறு விஷயங்களை சொல்லி கொடுப்பேன்.

எல்லையில்லாத, அளவிட முடியாத அன்பையும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல்வேறு விஷயங்களையும் எனக்கு கற்று கொடுத்தவன் நீ மட்டுமே. உடலை தாண்டி எனது உயிரை உணர வைத்த எனது மகனே, உனக்கு அன்னை ஆனதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

காஜலின் பதிவைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News