Watch Video: You Tube-ல் பட்டையைக் கிளப்பும் K-POP BTS-ன் புதிய பாடல் Dynamite!!

ஒரு பாடல் அல்லது வீடியோ You Tube-ல் பதிவேற்றப்படவுடன் உலகத்தையே அது தன்வயப்படுத்துவது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 06:33 PM IST
  • BTS, தங்கள் சமீபத்திய ட்ராக் Dynamite-ன் இசை வீடியோவை You Tube ல் பதிவேற்றியது.
  • கொரிய பாப் இசைக்குழுக்கள் முழு உலக இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.
  • டைனமைட்டின் டீஸர் இதுவரை யூடியூப்பில் 60 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
Watch Video: You Tube-ல் பட்டையைக் கிளப்பும் K-POP BTS-ன் புதிய பாடல் Dynamite!! title=

புதுடெல்லி: ஒரு பாடல் அல்லது வீடியோ You Tube-ல் பதிவேற்றப்படவுடன் உலகத்தையே அது தன்வயப்படுத்துவது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும். ஆனால் இப்போது அது உண்மையாகிவிட்டது. இது You Tube வரலாற்றில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ரெகார்டாக மாறியுள்ளது. இப்படி இதுவரை யாராலும் செய்ய முடிந்ததில்லை.

ஒரு புதிய வீடியோ  You Tube இல் பதிவேற்றப்பட்டுள்ளது. வெறும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள், இந்த பாடலை பலர் பார்த்து விட்டார்கள். பார்த்தவர்களின் எண்ணிக்கை சாதாரணமானது அல்ல. இது ஒரு ரெகார்டை உருவாக்கியுள்ளது. இந்த செய்தியை நீங்கள் படிக்கும் நேரத்தில், இந்த பாடல் மற்றொரு பெரிய சாதனையை படைத்திருக்கும்.

24 மணி நேரத்தில் 10 கோடி முறை பார்க்கப்பட்ட வீடியோ

கிடைத்த தகவல்களின்படி, கொரிய பாப்-இசைக்குழு BTS, தங்கள் சமீபத்திய ட்ராக் Dynamite-ன் இசை வீடியோவை You Tube ல் பதிவேற்றியது. உலகின் ஒட்டுமொத்த இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் K-POP-ன் இந்த வீடியோ, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் 10 கோடி பார்வைகளால் பார்க்கப்பட்டு ஒரு தனித்துவமான சாதனையை (New Record On You Tube) உருவாக்கியுள்ளது.

செவ்வாய் வரை இந்த பாடல் கிட்டத்தட்ட 19 கோடி முறை பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு,  You Tube-ல் மிக அதிக முறை பார்க்கப்பட்ட வீடியோவிற்கான சாதனை Blackpink-கிடம் இருந்தது. இந்த பேண்டின் வீடியோவான How You Like That-ஐ 24 மணி நேரத்திற்குள் 86.3 மில்லியன் மக்கள் பார்த்தனர்.

ALSO READ: உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் யோகா செய்யும் குரங்கின் வீடியோ!!

கொரிய பாப் பாடகர்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளனர்

கொரிய பாப் இசைக்குழுக்கள் முழு உலக இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த கொரிய இசைக்குழுக்களின் பாடல்களை இளைஞர்கள் மிக அதிக ஆர்வத்துடன் கேட்கிறார்கள். கொரிய பாப்-இசைக்குழு BTS-ன் Dynamite என்ற புதிய பாடல் ஏற்கனவே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில் இந்த பாடலின் டீஸர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டது. இந்த டீஸர் இதுவரை யூடியூப்பில் 60 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

இதுவரை Dynamite பாடல்கள்  You Tube-ல் 191 மில்லியன் வியூசைப் பெற்றுள்ளன. 2020 எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகளில், BTS முதல் முறையாக டி.வி.யில் நடமாடுவதைக் காணலாம். இது ஆகஸ்ட் 30 அன்று ஒளிபரப்பாகிறது.

ALSO READ: Video: ‘ஒரு அழகிய மழை நாளில் மதேரா சூரிய கோயில்’: வீடியோவைப் பகிர்ந்தார் பிரதமர் மோடி!!

Trending News