இந்த வருட தீபாவளியை ஒட்டி (Diwali 2023) கோலிவுட்டில் நான்கு படங்கள் வெளியாகின. அதில் முக்கியமாக வெளியான இரண்டு படங்கள், ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களும் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் வெளியான படங்கள்:
நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் (Japan Movie) இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதனை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகனான கார்த்தி மீதும் இயக்குநர் ராஜூ முருகன் மீதும் ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தை விட அதிகளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda DoubleX). தமிழ் சினிமாவில் தனித்துவமாக இயங்கும் இயக்குநர்களின் பட்டியலில் உள்ளவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படங்களுடன் சேர்ந்து விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ படமும், காளி வெங்கட்டின் ‘கிடா’ படமும் வெளியானது.
ஜிகர்தண்டா படத்தின் வசூல்:
2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் முன் கதையாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதிலும், ஒரு ரெளடியை வைத்து படம் எடுக்க ஒரு இயக்குநர் செய்யும் வேலைகளை காண்பித்துள்ளனர். இயக்குநராக எஸ்.ஜே.சூர்யாவும் ரெளடியாக ராகவா லாரன்ஸும் நடித்திருக்கின்றனர். படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியுள்ளதை ஒட்டி, இப்படத்தின் வசூல் விவரம் (Jigarthanda DoubleX Box Office Collection) வெளியாகியுள்ளது.
இரண்டு நாளில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் 2.5 கோடி வரை கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ‘ஜப்பான்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!
ஜப்பான் படத்தின் வசூல்:
தமிழ் நாட்டில் உள்ள பிரபலமான நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, ஜப்பான் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி, வித்தியாசமான தோற்றத்தில் தனது டைலாக் பேசும் தொனியை மாற்றி இதில் நடித்திருக்கிறார். இப்படமும் ரிலீஸாகி 2 நாட்கள் ஆகிறது. இந்த படத்தில் அனு இமானுவேல், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தமிழ் நாட்டை பொருத்த வரை, இப்படம் 2.5கோடி ரூபாய் வரை கலெக்ட் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
எந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது?
ஜிகர்தண்டா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு படங்களில் ஒரு படத்திற்கு மட்டுமே மக்கள் மத்தியில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் வந்தன. இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தை விட, தற்போது வெளியாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நன்றாக உள்ளதாக படம் பார்த்த மக்கள் விமர்சனங்களை கொடுத்தனர். அது மட்டுமன்றி, இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும் சில ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்தனர்.
ஜப்பான் படத்தின் விமர்சனமோ, ஜிகர்தண்டா 2 படத்தின் விமர்சனங்களுக்கு அப்படியே நேர்மறையாக உள்ளது. சில ஆண்டுகளாக சரியான கதைகளை தேர்ந்தெடுக்காமல் சறுக்கிய கார்த்தி, கடந்த 5 வருடங்களாகத்தான் ஸ்டடியான நாயகனாக நிமிர்ந்து நின்றார். அதற்குள், இது போல ஒரு சுமாரான கதையை அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக ரசிகர்கள் குறை பட்டுக்கொள்கின்றனர். மேலும், கார்த்தியின் சினிமா வாழ்க்கையிலேயே அவர் தேர்ந்தெடுத்த மிகவும் மோசனமான படம் இது என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள்X Vs ஜப்பான்: எந்த படம் நல்லாயிருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ