ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் படத்தறிக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்துள்ளனர். இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில், ஓடிடியில் இப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர்:
ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என அன்புடன் அழைக்கப்படுபவர், ரஜினிகாந்த். இவர் நடித்த படங்கள் சில கடந்த 5 ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. கடைசியாக நடித்த அண்ணாத்த படமும் அதற்கு முன்னதாக நடித்திருந்த தர்பார், பேட்ட, 2.0 போன்ற படங்களும் வசூலில் குறை வைக்கவில்லை என்றாலும், சினிமா ரசிகர்களை பெரிதும் ஈர்க்காமல் போனது. இதையடுத்து நடிகர் ரஜினியின் கம்-பேக்கிற்காக கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது.
குடும்ப கதைகளில் நடித்துக்காெண்டிருந்த ரஜினியை பிடித்து இழுத்து, ஆக்ஷன் கதையில் நடிக்க வைத்துள்ளார் நெல்சன் திலீப்குமார். படம், கடந்த 10ஆம் தேதி வெளியாகடி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினிக்கு ஏற்ற மாஸான காட்சிகள், புதிய பரிமானத்தில் அவருடைய காமெடி என ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் இந்த படத்தில் நிறைந்துள்ளது. இதனால், ரசிகர்கள் பலர் ஜெயிலர் படத்தை “அக்மார்க் ரஜினிகாந்த் படம்” என்று பாராட்டி வருகின்றனர்.
ஓடிடி ரிலீஸ்:
ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 5 நாட்களே கடந்துள்ள நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வரை ஜெயிலர் படம் 300 கோடிகள் வரை உலகளவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் ஓடிடி தளமான சன் நெக்ஸ்டில் அல்லது அது தொடர்புடைய வேறு ஒரு தளத்தில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
எப்போது ரிலீஸ்?
ஜெயிலர் படம் அதன் ரிலீஸ் தேதிக்கு 28 நாட்களுக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது, ஓடிடியில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் விதிக்கப்படும் விதிமுறை என்பதால் இதை ஜெயிலர் படமும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியன்று வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியிலும் பரவி வருகிறது.
ஜெயிலர் படத்தில் நடிக்க இருந்த பிரபலம்..
ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினியை தவிர நடித்திருந்த பிற முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே கேமியோ ரோலில் வந்திருந்தனர். மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகை தமன்னா, இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் வேறு ஒரு பிரபலமும் நடிக்க இருந்தாராம். மறைந்த நடிகர் என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணாவைை ஜெயிலர் படத்தில் ஒரு பயங்கரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நெல்சன் திலீப்குமார் நடிக்க வைக்க இருந்தாராம். ஆனால் அவருக்கு பவர் காெடுக்கும் அளவிற்கு தன்னால் அந்த கதாப்பாத்திரத்தை வடிவமைக்க முடியாததால் ஜெயிலர் படத்தில் அவரை நடிக்க வைக்க முடியாமல் போனதாக அவர் கூறியிருந்தார். எதிர்காலத்தில் வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக அவருடன் இணைந்து பணிபுரிவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | தொடர்ச்சியாக ஹிட் ஹீரோக்களுடன் கூட்டணி! தமிழ் சினிமாவை ஆளப்பாேகும் லோகேஷ்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ