நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வியாபார ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அவரது ஒட்டுமொத்த கரியரிலேயே அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பையும் இந்த விக்ரம் பெற்றுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து மகேஷ் நாராயணன் இயக்கும் படம், சபாஷ் நாயுடு, இந்தியன் - 2 மருதநாயகம், கைதி-2 என பெரும் பட்டியல் வரிசை கட்டி நிற்கிறது. இதற்கிடையே டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகிறார். இதனால் அரசியலுக்கு கமல் விரைவில் முழுக்குப் போடவுள்ளதாகக் கூறப்பட்டுவந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு கிடம் கூட அவரது கட்சிக்குக் கிடைக்காததும் அவரது கட்சியிலிருந்து தொடர்ச்சியாக பலர் வெளியேறிவருவதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இருந்தது.
இந்நிலையில் தனது அரசியல் பயணம் குறித்து கமல்ஹாசனே தற்போது விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் விக்ரம் படம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்திப்பு நடந்தது. அதில் அரசியல் நிலைப்பாடு பற்றிப் பேசிய கமல்ஹாசன், அடுத்த தேர்தலிலும் நிச்சயமாகப் போட்டியிடவுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!
படங்களில் மட்டும் நடிப்பாரா அல்லது அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவாரா எனக் குழப்பத்தில் இருந்துவந்தவர்களுக்கு கமலின் இந்தப் பதில் தற்போது ஒரு தெளிவைக் கொடுத்துள்ளது. கைவசம் படங்கள் உள்ள நிலையில் அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளது, சினிமா+ அரசியல் என்ற நிலைப்பாட்டில் அவர் எந்த மாற்றத்தையும் தற்போது செய்யவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கொரோனா பாதித்த ஷாருக்கான் நயன்தாரா மேரேஜில் கலந்துகொண்டது எப்படி?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR