இதயம் அப்டேட்: பாரதியை அறைந்த சாரதா.. விஷத்தை சாப்பிட்டு மயங்கிய பாரதி

Idhayam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 15, 2024, 12:47 PM IST
  • இதயம் : இன்றைய எபிசோட்.
  • கேக் வந்ததும் பயப்படும் பாரதி.
  • கோபமாகும் சாரதா.
இதயம் அப்டேட்: பாரதியை அறைந்த சாரதா.. விஷத்தை சாப்பிட்டு மயங்கிய பாரதி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.

இதயம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரிசெப்ஷன் பங்க்ஷன் தொடங்கி நடக்க ஏகாம்பரம் கேக்கில் விஷத்தை கலந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கேக் வந்ததும் பயப்படும் பாரதி

அதாவது, பாரதி ஆதி தனக்கு கிடைத்த பெரிய கிப்ட் என்றெல்லாம் பேசி முடிக்க அதன் பிறகு நல்ல விஷயத்தை கேக்குடன் தொடங்கலாம் என்று சொல்லி சாரதா கேக்கை கொண்டு வர சொல்ல பாரதி பயப்பட தொடங்குகிறாள். சாரதா கேக்கை கொண்டு வந்ததும் என பையனுக்காக என் கையால் செய்தது என்று சொல்ல ஆதி நீங்க செய்தால் அது நல்லா தான் இருக்கும் என்று பேசுகிறான். 

அதன்பிறகு ஆதி கேக் கட் பண்ண சாரதாவையும் மேடைக்கு கூப்பிட கேக் கட் பண்ண போகும் சமயத்தில் பாரதி வேண்டாம் என்று தடுத்து நிறுத்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எதுக்கு வேண்டாம்னு சொல்ற என்று சாரதா கேள்வி கேட்க அதில் விஷம் கலந்து இருக்கு என்று சொன்னதும் எல்லாருக்கும் பேரதிர்ச்சி, ஏகாம்பரம் இந்த விஷயம் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று குழப்பமும் அதிர்ச்சியும் அடைகிறான். 

மேலும் படிக்க | Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்

கோபமாகும் சாரதா

சாரதா என் பையனுக்காக நான் பண்ண கேக்ல எப்படி விஷம் இருக்கும் என்று கோபப்படுகிறாள், ஆதியும் பாரதியை நம்பாமல் என்ன பாரதி பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க பாரதி உறுதியாக சொல்ல சாரதா கோபமாகி பாரதியை அறைய பாரதி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். விஷம் இருக்குனு சொன்னா என்ன ஏதுனு பார்க்க வேண்டியது தானே, அதை விட்டுட்டு எதுக்கு அடிக்கணும் என்று சத்தம் போடுகின்றனர். 

ஸ்வேதா, அறிவு ஆகியோர் நீ எப்படி கேக்கில் விஷம் இருக்குனு சொல்லலாம் என்று பாரதியை திட்டுகின்றனர், ஆதியை நிலைமையை சமாளித்து சாரதாவை கேக் கட் பண்ண சொல்ல சாரதா கேக்கை வெட்டி ஆதிக்கு ஊட்டி விட போகும் சமயத்தில் பாரதி அதை பிடிங்கி சாப்பிட்டு விட மீண்டும் வாக்குவாதம் ஏற்படுகிறது. 

எல்லாரும் அவ்வளவு சொல்லியும் நீ எதுக்கு திரும்ப திரும்ப இப்படி பண்ணிட்டு இருக்க என்று கேள்வி கேட்கின்றனர். சாரதா மீண்டும் ஆதிக்கு கேக் ஊட்டும் போது கேக் சாப்பிட்ட பாரதி சரிந்து விழுகிறாள். இதனால் எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?

இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News