60 வயதை தாண்டியும் நடிப்பேன்: ஸ்ரேயா!!

நடிகை மெரில் போன்று 60 வயதை தாண்டியும் நடிப்பேன் என நடிகை ஸ்ரேயா தனது எதிர்கால திட்டம் குறித்து தெளிவாக உள்ளார்.

Last Updated : Jan 31, 2018, 06:55 PM IST
60 வயதை தாண்டியும் நடிப்பேன்: ஸ்ரேயா!! title=

நடிகை மெரில் போன்று 60 வயதை தாண்டியும் நடிப்பேன் என நடிகை ஸ்ரேயா தனது எதிர்கால திட்டம் குறித்து தெளிவாக உள்ளார்.

2001-ம் ஆண்டு உனக்கு 20 எனக்கு 18 திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரேயா. தொடர்ந்து, விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஸ்ரேயா 2007 ம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி போட்டார்.

தற்போது ஸ்ரேயாவின் மார்க்கெட் சரியாக இல்லை.ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு அவருக்கு நன்றாக அமைந்துள்ளது. தற்போது அவர் 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தமிழில் சில காலம் படங்கள் இல்லாமல் இருந்த நடிகை ஸ்ரேயா தற்போது தெலுங்கு பக்கம் பிரபலமடைந்து வருகிறார். பிரபல நடிகர் மோகன் பாபுவுடன் காயத்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ரேயா கிராமத்து பெண் வேடம் ஏற்றுள்ளார். நகர வாழ்க்கையை விட கிராமம் தான் தனக்கு பிடித்துள்ளதாகவும் ஸ்ரேயே கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நிகிலா விமலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

சினிமா பற்றி அவர் பேசும் போது, தொடர்ந்து சினிமா படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் படங்களில் நடிப்பீர்கள் என்று கேட்கிறார்கள். ஹாலிவுட்டில் நடிகை மெரில் 60 வயதை தாண்டியும் நடிக்கிறார். அவரை போன்று நானும் நடிப்பேன் என்றார்.

 

Trending News