மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் 401வது நாளான இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனை அவரசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காயம் பிரிவில் உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிய உணவினை வழங்கினார். இதில் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகை நயன்தாரா- விக்னேஷ்சிவன் திருமணம் 25கோடி ரூபாய்க்கு ஓடிடியில் விற்பனை செய்து ஆடம்பர கல்யாணமாக யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளதாக தெரிவித்தார். என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து அதனை நடத்தியது கிடையாது எனவும், எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என்றும் பேசியுள்ளார்.
நடிகர், நடிகைகளை பற்றி நான் கூறுவதை கேட்க 3லட்சம் பேர் இருக்கின்றனர். தொடர்ந்து பேசுங்கள் எனவும் பொதுமக்கள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை கூறுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரங்கநாதன் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரை தவிர யாரும் யோக்கியர் அல்ல எனவும், தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர் , நடிகைகளும் சம்பாதியத்தை பயன்படுத்தி பள்ளி, மருத்துவமனை, மஹால் தான் கட்டுகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்வதில்லை அதனால் நடிகர்கள் தலைவர் ஆவதை ஏற்க இயலாது என்றார்.
மேலும் படிக்க | ரயிலில் ‘வித் அவுட்’டில் பயணித்த இளைஞரின் பையில் ரூ.2 கோடி - எங்கு பிடிபட்டது?
தொடர்ந்து பேசியவர் நான் யாரை பற்றியும் ஆபாசமாக பேசவில்லை எனவும், சட்டத்திற்கு உட்பட்டே பேசுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | திருமண வீட்டில் மது விருந்து ; குடித்துவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய நண்பர்கள் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR