ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் ட்ரீட்!

Last Updated : May 10, 2017, 09:03 AM IST
ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் ட்ரீட்! title=

நடிகர் தனுஷின் ‘விஐபி-2’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்டார் நடிகர் தனுஷ்.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் வேலையில்லா பட்டதாரி. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி பட்டதின் 2-ம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டது. அதற்கான கதை, வசனத்தை நடிகர் தனுஷே எழுதினார். படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். 2-ம் பாகத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மேலும் அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய வேடம் ஒன்றில் நடிகை கஜோல் நடித்துள்ளார். இந்த 2-ம் பாகத்தை கலைப்புலி எஸ்.தாணு இணைந்து தயாரித்துள்ளார். 

தற்போது விஐபி-2 படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோ ஒன்றை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வரும் ஜூலை 28-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Trending News