நடிகர் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
உறுமீன் படத்தில் ரேஷ்மி மேனனுடன் சேர்ந்து நடிகையில் இவருக்கு காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்தாண்டு இவர்களது திருமணம் நடந்தது.
அண்மையில் ரேஷ்மி மேனன் கருவுற்றிருப்பதாக தகவல் வெளியானது. அவருக்கு வளைகாப்பு சீமந்த நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது.