Nithya Menen National Film Award For Best Actress : 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 70வது தேசிய விருதுகள், நேற்று (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டன. இதில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு, சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இது குறித்து கருத்துகளை கூறும் ரசிகர்கள், நித்யா மேனனுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகிக்கு விருது கொடுத்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.
70வது தேசிய விருதுகள்:
திரைப்படங்களுக்கும், திரைத்துறை கலைஞர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில், வருடா வருடம் தேசிய விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில், 2022ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பொன்னியில் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு மட்டும் பல விருதுகள் கிடைத்தது. திருச்சிற்றம்பலம் படத்திற்கும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது.
திருச்சிற்றம்பலம்:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம், திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, முனிஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்திடிருந்தனர். இந்த நிலையில், இப்படத்திற்குதான் தற்போது இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது.
சிறந்த நடிகைக்கான விருது:
நடிகை நித்யா மேனனுக்கு, சிறந்த நடிகைக்கான விருது திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக கிடைத்துள்ளது. 2005ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் இருக்கும் இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். இது, இவரது முதல் தேசிய விருது என கூறப்படுகிறது. இந்த நிலையில், நித்யா மேனனுக்கு பதிலாக வேறு ஒரு நடிகைக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வழங்கியிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | படப்பிடிப்பில் துன்புறுத்திய தமிழ் நடிகர்: நித்யா மேனன் ஓபன் டாக்
எந்த நடிகைக்கு?
2022ஆம் ஆண்டு, திருச்சிற்றம்பலம் படம் வெளியான பாேது, அதே ஆண்டில்தான் கார்கி திரைப்படமும் வெளியானது. இந்த படத்தில், சாய் பல்லவி நடித்திருக்கிறார். இதில், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஆர்.எஸ்.சிவாஜி, காளி வெங்கட், காலேஷ் ராமனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும், பெரிதும் பலர் மத்தியில் பிரபலமாகாத படமாக இருக்கிறது, கார்கி. இந்த படத்தில் சாய் பல்லவி ‘கார்கி’ எனும் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காதது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
நித்யா மேனன் நல்ல நடிகைதான் என்றாலும், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த அவரையும் கார்கி படத்தில் நடித்த சாய் பல்லவியையும் ஒப்பிடுகையில், நன்றாக நடித்தது சாய் பல்லவிதான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால், அவருக்கு இவ்விருது கிடைக்கவில்லையே என்று பலர் ஆற்றாமையில் இருக்கின்றனர்.
சிறந்த நடன இயக்குநருக்கான விருது…
திருச்சிற்றம்பலம் படத்திற்கு கிடைத்த இன்னொரு விருது, சிறந்த நடன இயக்குநருக்கானது. பெரிய அளவில் வைரலான “மேகம் கருக்காதா..” பாடலுக்கு, இவ்விருது கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு நடன இயக்குநர்களாக ஜனி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர். இந்த படத்தை அடுத்து பாென்னியின் செல்வன் 1 படத்திற்கும் சிறந்த இசை, சிறந்த தமிழ் படம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட4 விருதுகள் கிடைத்திருக்கிறது.
மேலும் படிக்க | 70வது தேசிய விருதுகள்: எந்தெந்த தமிழ் படங்களுக்கு என்னென்ன விருது? இதோ லிஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ