மீண்டும் இணையும் மெட்ராஸ் காம்போ.. வெளியானது புதிய அப்டேட்

மெட்ராஸ் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியும், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் மீண்டும் கைகோர்க்க உள்ளதாக சற்று முன் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 22, 2023, 03:18 PM IST
  • கார்த்தி கைவசம் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.
  • நடிகர் கார்த்தியும், பா.ரஞ்சித்தும் மீண்டும் இணைகின்றனர்.
  • இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
மீண்டும் இணையும் மெட்ராஸ் காம்போ.. வெளியானது புதிய அப்டேட் title=

நடிகர் கார்த்தியும், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி:
தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் ஆக்‌ஷன் நடிகராக அதே நேரத்தில் காமெடி , ரொமான்ஸ், நகைச்சுவை என எல்லா வகைகளிலும் ரசிகர்களை கவரும் வகையில்  நடித்து வரும் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் நடிகராக அறிமுகமான கார்த்தி, "இதுவா இவரது" முதல் படம் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு நடிகராக மாறினார். மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று படம் கார்த்தியை முழுவதும் மாஸாக மாற்றியது. இதன் பின் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வனின் வந்தியத் தேவன் கதாபாத்திரம் கார்த்தியின் முழு நடிப்பாற்றலையும் ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்தது.

மேலும் படிக்க | இந்த வீக் எண்ட் என்ன பார்க்கலாம்..? புது ஓடிடி பட ரிலீஸ்கள் இதாே..! 

கார்த்தி கைவசம் ஐந்து படங்கள்
இதனிடையே தற்போது கார்த்தி கைவசம் ஐந்து படங்கள் உள்ளது. இவை ஜப்பான், கார்த்தி26, கார்த்தி27, சர்தார் 2, கைதி 2 ஆகும். 

* ஜப்பான்: இந்த படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு திபாவளி வெளியீடாக ஜப்பான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

* கார்த்தி 26: நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி நடித்துவரும் திரைப்படம் ‘கார்த்தி 26’. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. 

* கார்த்தி 27: 96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தியின் 27வது படத்தை இயக்க இருக்கிறார். 

* சர்தார் 2: இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி 100 கோடி வசூல் வேட்டை ஆடிய படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

* நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது கைதி. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரெடி ஆகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.

கார்த்தி - பா ரஞ்சித் காம்போ:
இந்நிலையில் தற்போது சற்று முன் வெளியான தகவலின் படி, மெட்ராஸ் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியும், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் மீண்டும் கைகோர்க்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை கே. இ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க | மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைகிறாரா சமந்தா? இன்ஸ்டா பதிவுகளால் குழப்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News