டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 4 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!

Disney+ Hotstar: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் நான்கு புதிய சூப்பர்ஹிட் தமிழ் திரைப்படங்களை அதன் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2024, 07:05 AM IST
  • 4 புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.
  • ஸ்ட்ரீம் செய்யும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.
  • விரைவில் சபாநாயகன் வெளியாக உள்ளது.
டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 4 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!  title=

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | G.O.A.T: விஜய்யால் தமிழ் சினிமாவிற்கு இத்தனை கோடிகள் இழப்பா?

ஒரே டிக்கெட் - 4 படங்கள்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக 1 டிக்கெட் 4 படம் எனும், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் தற்போது நான்கு புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியும்.  இந்த நான்கு படங்களின் தொகுப்பு,  டிசம்பர் 30 அன்று பார்க்கிங் திரைப்படம் மற்றும் ஜனவரி 15 இல் ஜோ திரைப்படத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27 முதல் ஃபைட் கிளப் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டத்தின் இறுதிப் படமாக - சபா நாயகன் படத்தினை பிப்ரவரி 14 அன்று ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்  இயக்கத்தில் உருவான பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் 'பார்க்கிங்', இது டிசம்பர் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தில் முன்னணி நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் MS பாஸ்கர் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர், இப்படம் ஈகோ அதிகமிருக்கும் இரண்டு மனிதர்களைச் சுற்றி, ஒரு கார் பார்க்கிங் இடத்திற்காக நிகழும் பிரச்சனையை யதார்த்தமான சம்பவங்களுடன் பரபரப்பாகச் சொல்கிறது.  ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் நடிப்பில், இயக்குநர் S ஹரிஹரன் ராமின் இயக்கத்தில் காதல் பொழுதுபோக்கு திரைப்படம் 'ஜோ', இப்படம் ஜனவரி 15 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. ஜோ (ரியோ) எனும் இளைஞனின் வாழ்வும் அவனது காதலும், அவன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும் பற்றிய கதைதான் இந்தப்படம். இப்படம் ஜோவின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்கள் பற்றியது. 

முதல் பாதி கல்லூரியில் காதலிக்கும் பெண்ணைப் பற்றியதாக இருந்தாலும், அடுத்த பாதி வாழ்க்கையின் பிற்பகுதியில் அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியதாக அமைந்துள்ளது.  நடிகர்கள் விஜய் குமார் மற்றும் மோனிஷா மோகன் மேனன் நடிப்பில் இயக்குநர் அப்பாஸ் A ரஹ்மத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படம் ஃபைட் கிளப். வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் இளைஞர்களின் நட்பு, நம்பிக்கை, துரோகம் மற்றும் அவர்கள் நிலத்தின் பிரச்சனைகள் மீது வெளிச்சம் பாய்ச்சும்  தீவிரமான கதையை இப்படம் பேசுகிறது.  அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர்  நடிப்பில், இயக்குநர் C S கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட் ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம்  "சபா நாயகன்". ரசிகர்கள்  முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடிப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க | Vikranth: விஜய்யின் மகன் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த விக்ராந்த்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News